Yamaha bike: புத்தம் புதுப்பொலிவு, கூடுதல் அம்சங்கள்.. தாறுமாறாக பைக்குகளை களமிறக்கிய யமஹா நிறுவனம்
யமஹா நிறுவனம் பல்வேறு புதுப்புது அம்சங்கள் மற்றும் தோற்றங்களில், புதிய மோட்டார் சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
யமஹா நிறுவனம் பல்வேறு புதுப்புது அம்சங்கள் மற்றும் தோற்றங்களில், புதிய மோட்டார் சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, FZ-X, MT-15 V2 டீலக்ஸ், FZS-Fi V4 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்கள், முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 150சிசி பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மேலே குறிப்பிட்ட மாடல்களில், புதியதாக டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம்பெற்று உள்ளது.
டிராக்ஷன் கண்ட்ரோல் சிஷ்டத்தின் பயன் என்ன?
இன்ஜின் செயல்திறன் அதிகளவில் ஸ்லிப் ஆகாமல் இருக்க இக்னிஷன் டைமிங் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் வால்யுமை கண்ட்ரோல் செய்யும் பணியை, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஷ்டம் செய்கிறது. இதன் மூலம் வீல்களுக்கான பவர் சீராக வினியோகம் செய்யப்பட்டு, வீஸ்ஸ் பின் பெருமளவு குறைக்கப்படுகிறது.
FZ-X மாடல் பைக்:
FZ-X மாடலிலில் எல்.ஈ.டி. ஃபிளாஷர்கள் உடன் முற்றிலும் புதிய டார்க் மேட் புளூ மற்றும் கோல்டன் நிற ரிம் வேரியண்ட் வழங்கப்படுகிறது.
FZS-Fi V4 மாடல்:
புதிய FZS-Fi V4 டீலக்ஸ் மாடலில் முற்றிலும் புதிய முகப்பு விளக்கு டிசைன், எல்.ஈ.டி ஃபிளாஷர்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய FZS-Fi V4 டீலக்ஸ் மற்றும் FZ-X மாடல்களில் சிங்கில் சேனல் ஏபிஎஸ், மல்டி-ஃபன்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எல்.ஈ.டி. முகப்பு விளக்கு, டையரை சுற்றி ரியர் மட்கார்டு, லோயர் என்ஜின் கார்டு வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் 12.5 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 149சிசி இன்ஜின் இடம்பெற்றுள்ளது. காற்று மாசு அளவை கட்டப்படுத்தும் வகையில், புதிய யமஹா FZS-Fi V4 டீலக்ஸ் மற்றும் FZ-X மாடல்களை E20 ஃபியூவல் கம்பேடபிலிட்டி வழங்கப்பட்டுள்ளது.
MT-15 V2 மாடல்:
புதி்ய MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களிலும் யமஹாவின் லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின் மற்றும் வேரியபில் வால்வு ஆக்டிவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 18.4 பிஎஸ் பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதோடு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளன.
2023 R15M மாடல்
2023 R15M மாடலில் YZF-R1 சார்ந்த டிஎஃப்டி மீட்டர் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், டிராக்& ஸ்டிரீட் மோட் செலக்டர், எல்.ஈ.டி ஃபிளாஷர்கள், புதிய டார்க் நைட் நிற வேரியண்டில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. புதிய MT-15 V2 டீலக்ஸ் மாடல் தற்போது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஃபுளோ-வெர்மிலன், சியான் ஸ்டாம் மற்றும் ரேசிங் புளூ போன்ற நிறங்களிலும் விற்பனைக்கு வருகிறது.
விலை விவரங்கள்:
யமஹா FZS-Fi V4 டீலக்ஸ் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 400
யமஹா FZ-X டார்க் மேட் புளூ ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 900
யமஹா MT-15 V2 டீலக்ஸ் மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 400
யமஹா R15 V4 டார்க் நைட் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 900
யமஹா R15M ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 900