Xiaomi SU7: ஸ்மார்ட் ஃபோன் டூ மின்சார கார்! இந்தியா வருகிறது ஷாவ்மி நிறுவனத்தின் SU7 மின்சார கார்
Xiaomi SU7 EV CAR: ஷாவ்மி நிறுவனத்தின் SU7 மின்சார கார் விரைவில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
Xiaomi SU7 EV CAR: ஷாவ்மி நிறுவனத்தின் SU7 மின்சார கார் 5 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி SU7 மின்சார கார்:
சீனாவை தலைமையிடமாக கொண்ட ஷாவ்மி நிறுவனம், அதன் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்நிலையில் தான் அந்நிறுவனம் மின்சார கார் உற்பத்தி சந்தையில் குதித்துள்ளது. அந்த வகையில் ஷாவ்மி நிறுவனம் தயாரித்துள்ள முதல் மின்சார கார் விரைவில் காட்சிப்படுத்த உள்ளது. அதேநேரம், இந்த SU7 மாடல் மின்சார காரை இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை எனவும், ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் முதல் தயாரிப்பான SU7 ஒரு பிரீமியம் மின்சார வாகனமாகும். இது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கான போட்டியாக. ஆடம்பர செக்மெண்டில் கவனம் செலுத்துகிறது.
சீனாவில் விற்பனையில் அசத்திய SU7:
சீனாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த நிலையில், கூடுதலாக 100,000 க்கும் அதிகமான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் டெலிவரிகள் சில காலத்திற்கு முன்பே தொடங்கியுள்ளன. அதேநேரம், இந்தியாவில், பெங்களூரில் நடைபெறும் கண்காட்சியின் ஒரு பகுதியாக ஷாவ்மி பிராண்ட் தனது காரை காட்சிப்படுத்த உள்ளது.
காரின் வடிவமைப்பு விவரங்கள்:
ஒரு பிரீமியம் செடான் மாடலான SU7 கிட்டத்தட்ட 5m நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டாப்-எண்ட் எடிஷன் இரட்டை மோட்டார்களுடன் வரும் அதே நேரத்தில் இது 101 kWh Qilin பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 800 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை மோட்டார்கள் 600bhp க்கும் அதிகமான ஆற்றலை உருவாக்குகிறது. ஒருவேளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் BYD சீல் போன்றவற்றுக்கு இது போட்டியாக இருக்கும்.
விலை விவரங்கள்:
ரேஞ்ச் பிளஸ் பவர் மீது கவனம் செலுத்தும் வகையில், ஸ்வூபி மற்றும் ஏரோ திறமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Xiaomi இந்தியாவில் தற்போது காட்சிப்படுத்த மட்டுமே திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் சாத்தியமான வெளியீட்டிற்கான கருத்து சேகரிக்க இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. அறிமுகப்படுத்தப்பட்டால், இது Hyundai Ioniq 5 மற்றும் BYD Seal போன்றவற்றுடன் சேர்த்து சுமார் ரூ. 40 லட்சம் விலையில் கிடைக்கும். அதேநேரம், டூயல் மோட்டார் எடிஷன் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விலையில் ஷாவ்மி நிறுவனம் தனது SU7 கார்களை நஷ்டத்தில் விற்பானி செய்து வருகிறது. ஒருவேளை இந்திய சந்தையில் அந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டால், அந்நிறுவனத்திற்கு அந்த முடிவு ஒரு பெரும் உந்து சக்தியாக அமையக்கூடும். பிரீமியம் என் செக்மெண்டை நோக்கிய இந்திய EV சந்தை அதிக விருப்பங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் வரும் ஆண்டில் மின்சார கார் பிரிவில் நிறைய புதிய அறிமுகங்களையும் காணலாம். இது தற்போது மொத்த இந்திய கார் சந்தையில், EV விற்பனையை மேலும் அதிகரிக்கும்.