எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ப்ளானா? சிறந்த ஸ்கூட்டர்களின் லிஸ்ட் இங்கே!
எலக்ட்ரிக் டூவீலர் பிரிவில் நிறைய இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நுழைந்துள்ளன.
நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால், தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நம் நாட்டில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இந்தமாதிரி வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், இந்த இரு சக்கர வாகனப் பிரிவில் நிறைய இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. எனவே, நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய சில விருப்பான ஸ்கூட்டர்களின் விலை மற்றும் விவரக்குறிப்பு கீழே காணலாம்.
ஓலா எலக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ
ஓலா எலக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்கள் 750டபிள்யூ போர்ட்டபிள் சார்ஜருடன் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,21,999. 118 கிமீ வரை இதில் பயணம் மேற்கொள்ளலாம். அதன் 2.9 கிலோவாட் பேட்டரியை ஆறு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் வேரியண்ட் ரூ .1.42 லட்சம், பிரீமியம் வேரியண்ட் ரூ .1.44 லட்சம் ஆகும். ஈகோ மோடில் 95 கி.மீ. வரை இதில் பயணம் செய்யலாம். 2.9 கிலோவாட் பேட்டரியுடன், ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
ஏதர் 450 எக்ஸ்
ஏதர் 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 116 கி.மீ. வரை பயணம் மேற்கொள்ளலாம். ரூ. 1.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை. ஏத்தர் 450X மணிக்கு 80 கிமீ வேகத்தை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 2.61 கிலோவாட் பேட்டரி உள்ளது மற்றும் 3 மணி 35 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்
சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 4.8kWh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஓலா ஸ்கூட்டரின் பேட்டரியை விட அதிக சக்தி வாய்ந்தது. ஸ்கூட்டர் சுற்றுச்சூழல் பயன்முறையில் பயன்படுத்தினால், 236 கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொள்ளலாம். ஸ்கூட்டரின் விலை ரூ .1.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதில் removable சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஐக்யூப்
டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் 75 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்ளலாம். இதன் விலை 1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த ஸ்கூட்டரில் 1.4 kWh பேட்டரி உள்ளது. இது ஐந்து மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.