Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Updated 3 Door Mahindra Thar: மஹிந்திரா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 3 டோர் தார் கார் மாடல் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated 3 Door Mahindra Thar: மஹிந்திரா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 3 டோர் தார் கார் மாடல் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மஹிந்திராவின் அப்டேடட் 3 டோர் தார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு தார் கார் மாடலை அறிமுகப்படுத்தியது முதலே, மஹிந்திரா நிறுவனம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து வருகிறது. அட்டகாசமான ஆஃப்-ரோட் செயல்திறன் மற்றும் கரடுமுரடான தோற்றம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடைமுறைக்கு உகந்த ஆஃப்-ரோட் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி இந்நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தி வருகிறது. மலிவு விலையில் கிடைப்பதும் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. அதன்படி, வந்த தாரின் 5 டோர் எடிஷனும் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனாலும் கூட தொடர்ந்து நிலவும் தேவை காரணமாக, வேரியண்ட் அடிப்படையில் தார் காருக்கான அதிகபட்ச காத்திருப்பு 6 மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்நிலையில் தான், இரண்டாவது தலைமுறை கார் மாடல் அறிமுகமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கான மிட்-லைஃப் அப்டேட்டை மஹிந்திரா தயார்படுத்தி உள்ளது. சாலை பரிசோதனையின் போது பல முறை இந்த கார் அடையாளமும் காணப்பட்டுள்ளது.
அப்டேடட் 3 டோர் தார் அறிமுகம் எப்போது?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, மஹிந்திராவின் 3 டோர் அப்டேடட் தார் எடிஷன் வரும் செப்டம்பர் 1ம் தேதி சந்தைப்படுத்தப்படலாம். இதனிடையே, வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 4 புதிய எஸ்யுவி கான்செப்ட்கள் மற்றும் புதிய பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, புதிய தலைமுறை பொலேரோ கார் மாடலும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்பட உள்ள XUV700 கார் மாடலையும் மஹிந்திரா நிறுவனம் சாலை பரிசோதனையில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தகக்து.
அப்டேடட் 3 டோர் தார் - புதிய வடிவமைப்பு
சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்ட தாரானது, வடிவமைப்பில் புதிய 5 டோர் ராக்ஸின் தாக்கத்தை பெற்றிருப்பதை காட்டுகிறது. முன்புற பம்பர் முற்றிலுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஃபாக் லைட்களானது நவீன காலத்திற்கு ஏற்றதாக தெரிய, சில திருத்தங்களை கொண்டுள்ளது. க்ரில்லில் லேசான சில மாற்றங்கள் செய்ததோடு, இதிலும் C வடிவ எல்இடி விளக்குகள் இடம்பெற வாய்ப்புள்ளது. முந்தைய மாடலில் இருந்து வேறுபட்டு இந்த எஸ்யுவி ஆனது புதிய அலாய் வீல் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
அப்டேடட் 3 டோர் தார் - புதிய அம்சங்கள் என்ன?
டேஷ்போர்டில் வைக்கப்பட்டுள்ள பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் கவனத்தை ஈர்கக்கூடிய மிக முக்கிய அம்சமாக பார்கப்படுகிறது. செண்டர் கன்சோல் லே-அவுட்டும் மேம்படுத்தப்படும் குறிப்பாக கியர் லிவர் பகுதியில் மேம்படுத்தப்படும். வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. மேம்படுத்தப்பட்ட இண்டீரியருக்கு இணையாக ஸ்டியரிங் வீலும் முற்றிலுமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனபடுத்தலை அதிகரிப்பதற்காக பவர் விண்டோ கண்ட்ரோல்களானது செண்ட்ரல் கன்சோலிலிருந்து மாற்றப்பட்டு டோர்களிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அப்டேடட் 3 டோர் தார் - இன்ஜின் விவரங்கள்:
வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டாலும், இன்ஜின் அடிப்படையில் தாரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே லேடர் ஃப்ரேமிலேயே 3 டோர் தார் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. வலுவான செயல்திறனுக்கு பெயர்போன 1.5 லிட்டர் டீசல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசர் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. டீசல் இன்ஜின் கார்களானது ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இன்ஜின் மற்றும்ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் இந்த காரானது 10 முதல் 15 லிட்டர் மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது.
அப்டேடட் 3 டோர் தார் - விலை, போட்டியாளர்கள்
தற்போதைய எடிஷனின் ஆன் ரோட் விலை சென்னையில் 14 லட்சத்து 35 ஆயிரத்தில் தொடங்கி 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. கூடுதல் அம்சங்கள் காரனமாக புதிய எடிஷனின் விலை சற்றே அதிகரிக்கலாம். அப்படி இந்த கார் அறிமுகமாகும்போது, ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுசூகி ஜிம்னி ஆகிய கார் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும்.
தார் காரை மக்கள் விரும்புவது ஏன்?
கட்டுமஸ்தான கட்டமைப்பு, வலுவான செயல்திறன் கொண்ட இன்ஜின் மற்றும் 4 வீல் ட்ரைவ் அம்சங்கள் காரணமாக, தார் காரானது ஆஃப் ரோட் கிங் என வர்ணிக்கப்படுகிறது. இதனால் மோசமான சாலைகளில் கூட சிரமமின்றி பயணிக்க சரியான தேர்வாக உள்ளது. அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ற கோணங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.





















