Jeep Electric Car: ஜீப் நிறுவனத்தின் புதிய மின்சார கார் - எப்போது இந்தியாவில் அறிமுகம் தெரியுமா?
Jeep Electric Car: ஜீப் நிறுவனத்தின் பிரபல எஸ்யுவி மாடலான காம்பஸ் கார், மின்சார வாகனமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Jeep Electric Car: ஜீப் நிறுவனத்தின் பிரபல எஸ்யுவி மாடலான காம்பஸ் கார், மின்சார வாகனமாக 2026ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜீப் மின்சார கார்:
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை கார் மாடல் தற்போது உற்பத்தி நிலையில் உள்ளது. இந்தமாடல் 2026 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. J4U என்ற குறியீட்டுப் பெயருடன், தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸின் STLA M ஃபிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இது பல்வேறு சிறந்த அம்சங்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. அதாவது ICE மற்றும் மின்சார வாகனங்களை உருவாக்குகிறது. அதன்படி, ஜீப் அடுத்த தலைமுறையுடன் இந்தியாவுக்கு முழு மின்சார வாகனத்த கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜீப் காம்பஸ் மின்சார வாகனம்:
Stellantis STLA மீடியம் ஃபிளாட்ஃபார்மானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மின்சார வாகனங்களை தயாரிப்பதை மட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களை உருவாக்குவதற்கான அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த ஃபிளாட்ஃபார்மானது 98kWh வரை பேட்டரி பேக்குகளைக் கொண்டிருகும் முன் மற்றும் நான்கு சக்கர இயக்கி வாகனங்களை உருவாக்க வல்லது. ஸ்டாண்டர்ட் பேக் 500கிமீக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் என ஸ்டெல்லாண்டிஸ் கூறுகிறது. அதே நேரத்தில் பெர்ஃபாமன்ஸ் பேக் 700கிமீக்கும் அதிகமான ரேஞ்ச் வரம்பைக் கொண்டுள்ளது.
STLA மீடியம் 400-வோல்ட் மின்சார கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. இது 100 கி.மீட்டருக்கு வெறும் 14kWh ஆற்றலை மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் 27 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். அதாவது நிமிடத்திற்கு 2.4kWh சார்ஜ் ஆகிறது. கூடுதலாக, 218hp மற்றும் 388hp ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார மோட்டார்கள் இந்த தளத்தில் பயன்படுத்தப்படலாம். மின்சார பவர்டிரெய்னுடன், அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன்களுக்கான Stellantis STLA ஃபிளாட்ஃபார்ம்:
ஜீப்பின் சகோதரி பிராண்டான சிட்ரோயனும் அதன் அடுத்த தலைமுறை மாடல்களுக்கு STLA மீடியம் ஃபிளாட்ஃபார்ம் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இயற்கையில் மாடுலர் என்பதால் - நீளம் மற்றும் வீல்பேஸ்கள் முறையே 4.3-4.9 மீ மற்றும் 2.7-2.9 மீ வரை மாறுபடும். இது சி மற்றும் டி செக்மெண்டில் உள்ள பலவகையான வாகனங்களை ஆதரிக்கும். தற்போதைய காம்பஸ் வரம்பு மற்றும் சிட்ரோயனின் C-க்யூப் மாடல்கள் ( C3 ஹேட்ச் , eC3 EV , C3 Aircross SUV மற்றும் C3X செடான்) அவற்றின் தனிப்பட்ட FCA மற்றும் PSA கட்டமைப்புகளின் அடிப்படையில் கடைசி மாடலாக இருக்கும். இனி, இரண்டு பிராண்டுகளின் அனைத்து மாடல்களும் இந்தியாவில் பொதுவான STLA தளத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.