Triumph Trident 660: ஒரு வருடம் மட்டுமே வாய்ப்பு..! டிரையம்ப் டிரைடண்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம், என்ன இருக்கு?
Triumph Trident 660: டிரையம்ப் நிறுவனத்தின் டிரைடண்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் இருசக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Triumph Trident 660: டிரையம்ப் நிறுவனத்தின் டிரைடண்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் இருசக்கர வாகனமானது, ஒரு வருடத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என கூறப்படுகிறது.
Triumph Trident 660:
டிரையம்ப் அதன் டிரைடென்ட் ட்ரிபிள் ட்ரிப்யூட், ஒரு தனித்துவமான வண்ணப்பூச்சு மற்றும் சில ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிஷனான டிரைடென்ட் 660 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் எடிஷனான 660 ஆனது, 1970களில் ஐல் ஆஃப் மேன் டிடியில் பல வெற்றிகளைப் பெற்ற 750சிசி டிரையம்ப் டிரைடென்ட்டை அடிப்படையாகக் கொண்ட 'ஸ்லிப்பரி சாம்' ரேஸ் பைக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு:
டிரைடென்ட் டிரிபிள் ட்ரிப்யூட் சிவப்பு நிற கோடுகளுடன் கூடிய தனித்துவமான வெள்ளை மற்றும் உலோக நீல வண்ணங்களை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது பக்கவாட்டிலும், எரிபொருள் தொட்டியின் மேற்புறத்திலும் 67 கிராஃபிக் எண் பதிக்கப்பட்டுள்ளது. அதோடு வாகனத்தின் மற்ற பகுதிகள் ஃபிளைஸ்கிரீன் மற்றும் பெல்லிபான் ஆகிய வண்ணங்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆனது ஸ்டேண்டர்ட் மாடலில் இருந்து வேறுபடுகிறது.
இன்ஜின், சிறப்பம்சங்கள் விவரம்:
இன்ஜின் அமசங்களை பொறுத்தவரையில், ஸ்பெஷல் எடிஷனான டிரையம்ப் டிரைடென்ட் 660 ஸ்டேண்டர்ட் எடிஷனில் இருந்து மாறாமல் உள்ளது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள லிக்விட்-கூல்டு, 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர் இன்ஜின் ஆனது, 81hp மற்றும் 64Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பைடைரக்ஷனல் குயிக்க்ஷிஃப்டர் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது ஸ்டேண்டர்ட் எடிஷனில் கூடுதல் விருப்பமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் ட்யூபுலர் ஃப்ரேம் ஷோவா USD ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் உடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பிரேக்கிங் செயல்முறயானது முன்புறத்தில் இரட்டை 310மிமீ டிஸ்க்குகளாலும், பின்புறத்தில் 255மிமீ டிஸ்க்குகளாலும் கையாளப்படுகிறது.
டிரைடென்ட் பைக் சாலை மற்றும் மழை என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. அதோடு, அட்ஜெஸ்டபிள் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களையும் பெறுகிறது. இவற்றை TFT-டாஷ் வழியாக அணுகலாம். டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஆல்-எல்இடி லைட்டிங் மற்றும் தானாக அணையும் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்திய சந்தையில் விலை எவ்வளவு?
டிரையம்ப் இந்தியா தனது போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் சமீபத்திய புதிய மாடல்களாகம், அதன் மிக சக்திவாய்ந்தவை பைக்குக்ளான ராக்கெட் 3 ஸ்டார்ம் ஆர், ஜிடி ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ.8.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, டிரையம்பின் அதிக செயல்திறன் கொண்ட போர்ட்ஃபோலியோவில் ஸ்டாண்டர்ட் டிரைடென்ட் 660 மிகவும் அணுகக்கூடிய மோட்டார்சைக்கிள் மாடலாகும். இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் ஆனது ஒரு வருடத்திற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சரியான விலை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ரூ. 50,000 பிரீமியம் தொகையாக வசூலிக்கப்படலாம்.