Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Toyotas First Electric Car: டொயோட்டா நிறுவனத்தின் முதல் மின்சார கார் நடப்பாண்டு இறுதியில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Toyotas First Electric Car: டொயோட்டா நிறுவனத்தின் முதல் மின்சார காரான அர்பன் க்ரூசர், 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா அர்பன் க்ரூசர் EV:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் டாப் ஸ்பெக் எஸ்யுவி பிரிவில் டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரம், உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்தே, டொயோட்டா நிறுவனமும் மின்சார பிரிவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் உருவாக்கிய முதல் மின்சார காரான அர்பன் க்ரூசர் மாடல், பெல்ஜியத்தில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 5 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, நடப்பாண்டின் இறுதியில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகபப்டுத்தப்பட்டுள்ளது.
அர்பன் க்ரூசர் EV: வடிவமைப்பு, வெளியீடு:
அர்பன் க்ரூசரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாருதி e - விட்டாரா, வரும் செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, நடப்பாண்டின் இறுதிக்குள் டொயோட்டாவின் மின்சார காரை எதிர்பார்க்கலாம். இந்த காரானது e - விட்டாரா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் டொயோட்டாவின் பல்வேறு கார்களில் உள்ள சிறப்பம்சங்களை தன்னகத்தே பெற்றுள்ளது. 4,285 மில்லி மீட்டர் நீளம், 1,800 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 2,700 மில்லி மீட்டர் வீல்பேஸ் நீளத்தை அர்பன் க்ரூசர் EV கொண்டுள்ளது. இந்த விவரங்களின்படி, புதிய காரானது யாரிச் க்ராஸ் மற்றும் e - விட்டாரா ஆகிய இரண்டு மாடல்களை காட்டிலும் பெரிதாக இருப்பதை உணரலாம். குஜராத்தில் உள்ள SMC தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த கார், சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
அர்பன் க்ரூசர் EV: பேட்டரி விவரங்கள்
சர்வதேச சந்தையில் அர்பன் க்ரூசர் EV மாடல் இரண்டு மாறுபட்ட லித்தியம் - அயர்ன் - பாஸ்பேட் பேட்டரி பேக்குடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில் குறிப்பிட்ட வேரியண்ட்களில் ஆல்-வீல் ட்ரைவ் வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. 144hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 49KWh திறன் கொண்ட பேட்டரி ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் செட்-அப்பிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 61KWh எனும் அதிக திறன் கொண்ட பேட்டரி ஃப்ரண்ட் வீல் மற்றும் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஆப்ஷனானது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் செட்-அப்பில் 174hp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதேநேரம், ஆல்-வீல் ட்ரைவ் செட்டப்பில் 184hp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. ரியர் ஆக்சிலில் அமைக்கப்பட்டுள்ள 48KW மின்சார மோட்டரே இந்த கூடுதல் ஆற்றல் உற்பத்திக்கு காரணமாகும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 500+ கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இது கொண்டிருக்கும்.
அர்பன் க்ரூசர் EV: அம்சங்கள்
டொயோட்டா அர்பன் க்ரூசர் மின்சார வாகனமான, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன்படி, பனோரமிக் 360 டிகிரி கேமரா சிஸ்டம், ப்வர்ட் ட்ரைவர்ஸ் சீட், ஆட்டோ ஹோல்ட் ஃபங்சனாலிட்டி உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் அடங்கும் இன்ஃபோடெயின்மெண்டானது 10.1 இன்ச் டச்-ஸ்க்ரீன் மூலமும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் 10.25 இன்ச் டஸ் ஸ்க்ரீன் மூலமும் கையாளப்படுகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைனிங் சீட் ஃபங்சனாலிட்டி , ADAS மற்றும் JBL ஆடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. இதுபோக ஏர்பேக்குகள் போன்ற ஸ்டேண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
விலை, போட்டியாளர் விவரங்கள்:
டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் மின்சார காரின் விலை, இந்திய சந்தையில் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரானது தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மிட்-சைஸ் மின்சார எஸ்யுவிகளான ஹுண்டாய் கிரேட்டா, மஹிந்திரா BE 6 மற்றும் டாடா ஹாரியர் ஆகியவற்றுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்துவதை போன்றே, மின்சார எஸ்யுவி பிரிவிலும் டொயோட்டா ஆதிக்கம் செலுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய மின்சார கார் சந்தையில் டாடா நிறுவனம் அதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு சவால் விடுக்கும் வகையில், டொயோட்டா தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துமா? என்பதற்கும் காலமே பதில் சொல்ல வேண்டும்.





















