Innova Crysta Electric: எலக்ட்ரிக் காராக களமிறங்கும் இன்னோவா..! விரைவில் சந்தையில்.. அசரடிக்கும் அம்சங்கள்!!
டயோட்டா நிறுவனத்தின் எலக்டிரிக் கார் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையாகி வரும் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று டயோட்டா நிறுவனம். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது சில புதிய மாடல்களை இறக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது எலக்டிரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நிறுவனத்தின் மிகவும் முக்கியமான கார் ரகமான இன்னோவாவில் எலக்டிரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி இன்னோவா கிறிஸ்டா காரில் எலக்டிரிக் ரக வாகனத்தை அறிமுகமப்படுத்தியுள்ளது. இந்த ரக கார் இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ஷோவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் தற்போது உள்ள இன்னோவா கிறிஸ்டா மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாகனத்தின் முன்பக்கத்தில் தற்போது உள்ள கிரில் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளது. இதற்காக எலக்டிரிக் கிரில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய வகை எல்.இ.டி பல்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. காரின் பம்பர் மற்றும் வீல்கள் எலக்டிரிக் வாகன தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே தற்போது இருக்கும் இன்னோவா மாடலில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய ஸ்கிரீன் வசதியும் இதில் உள்ளது.
இந்த வாகனம் தற்போது சந்தைக்கு வர வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த பெரிய காருக்கு ஏற்ப பெரிய பேட்டரி பேக் தேவைப்படுகிறது. அத்துடன் இது அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதற்குஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஆகவே இந்த வாகனம் கூடிய விரைவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு குறைவு. தற்போது இந்தியாவில் எலக்டிரிக் வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே அதை குறி வைத்து விரைவில் இன்னோவா எலக்டிரிக் கார் வரும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்தியாவில் இது விற்பனைக்கு வர சில காலங்கள் எடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த வாகனம் அதிக தூரம் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதால் இதில் சில புதிய ஏற்பாடுகளை செய்ய அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. எனவே இதற்கு சில காலம் எடுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த மாடல் மட்டுமே வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:Ola Scooter Fire: ஓலா ஸ்கூட்டர் திடீரென தீப்பிடிக்க என்ன காரணம்? நீடிக்கும் குழப்பம்! விசாரணை தீவிரம்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்