Top Selling SUV: எஸ்யுவி-ன்னா இதுதான்..! இந்தியாவில் விற்பனையில் அசத்தும் கார் மாடல்கள் - டாப் 6 லிஸ்ட்
Top Selling SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் அசத்தும், எஸ்யுவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Top Selling SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் அசத்தும், டாப் 6 எஸ்யுவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
எஸ்யுவி கார் மாடல்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தை விற்பனையில், எஸ்யுவி கார் மாடல்கள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பயனர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, உற்பத்தியாளர்களும் பல்வேறு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி மாத விற்பனை தரவுகளின்படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUV கள் குறித்து இங்கே அறியலாம். இந்த SUV கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாதந்தோறும் மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன.
விற்பனையில் அசத்தும் டாப் 6 எஸ்யுவி கார்கள்:
ஹூண்டாய் க்ரேட்டா:
க்ரேட்டா இதுவரை இல்லாத அளவிலான அதிக விற்பனையை கடந்த மாதம் பெற்றுள்ளது மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஆகவும் உள்ளது. அதன்படி, சுமார் 18522 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. க்ரேட்டா தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. மேலும் புதிய மின்சார எடிஷனும் விற்பனையில் சேர்ந்துள்ளது. அதே நேரத்தில் டீசல் மற்றும் பெட்ரோலுடன் கூடிய ஸ்டேண்டர்ட் க்ரேட்டா விற்பனை அட்டவணையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
டாடா பஞ்ச்:
பஞ்ச் எஸ்யூவி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் இல்லை, ஆனால் தற்போது மாதந்தோறும் அதிக விற்பனையாகும் sub 4m SUV ஆகும். பஞ்ச் கடந்த மாதம் 16, 231 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது ஒரு பெரிய எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் டாடாவிற்கு நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. ஏனெனில் இப்போது அதிக விற்பனையான பெட்ரோல் எடிஷனுடன் சிஎன்ஜி எடிஷனும் உள்ளது.
மாருதி கிராண்ட் விட்டாரா:
புதிய கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ் மற்றும் 4 மீட்டருக்கும் அதிகமான எஸ்யூவிகளை எளிதாக வீழ்த்தி, 15,784 யூனிட்கள் என்ற அதிக விற்பனையை எட்டியுள்ளது. டீசல் அல்லது டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் கூட வழங்கப்படாட்டாலும் கிராண்ட் விட்டாரா அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது.ஹைப்ரிட் ஸ்ட்ராங் வேரியண்ட் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ:
மஹிந்திரா சர்பில் புதிய கார் மாடல்கள் வெளியானாலும், பெரிய ஸ்காப்ரியோ தொடர்ந்து மிகப் பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. மேலும் புதிய ஸ்காப்ரியோ N எடிஷன் அதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஸ்கார்பியோ அதன் விற்பனை எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு 15,442 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதன் அளவு, இருப்பு மற்றும் மதிப்புடன் ஸ்கார்பியோ N மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
டாடா நெக்ஸான்:
பஞ்ச்-க்குப் பிறகு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப் 4 மீ எஸ்யூவிகளில் நெக்ஸானும் ஒன்றாகும். புதிய போட்டி இருந்தபோதிலும் இது இன்னும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. அதன்படி, நெக்ஸான் மாடலில் கடந்த ஜனவரி மாதத்தில் 15,397 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் இது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக் காரணம் அதன் வடிவமைப்பு, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள். புதிய சிஎன்ஜி எடிஷனின் இணைப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
மாருதி சுசூகி ஃபிராங்க்ஸ்:
மாருதியின் பலேனோவை காட்டிலும், அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ராங்க்ஸ் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக வடிவமைப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, ஃபிராங்க்ஸின் ஜனவரி மாத விற்பனை 15,192 யூனிட்களாக உள்ளது மற்றும் நிலையான 1.2 லிட்டர் பெட்ரோல் ஃபிராங்க்ஸின் சிறந்த விற்பனையான எடிஷனாக உள்ளது. அதே நேரத்தில் மாருதி ஃபிராங்க்ஸில் டர்போ பெட்ரோல் எடிஷனும் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

