புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
நறுமணம் வீசும் புதினாவை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் உடல் அமைதியாகும். மன அழுத்தம் குறைவாகும்.
அஜீரணத்தைச் சீர்செய்யும் போக்கு புதினாவிற்கு உண்டு. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு புதினா நல்ல தீர்வாகும். சளி பிரச்சினைக்கு நல்ல தீர்வாக புதினா செயல்பட்டு அசெளகரியத்தை நீக்குகிறது.
புதினாவிற்கு மாதவிடாய் வலியை குறைக்கும் பண்புகள் அதிகம். இது தசைகளின் பிடிப்புகளை குறைத்து அசெளகரியத்தை குறைக்கிறது.
குடலைச் சுத்தப்படுத்துவதுடன் அழற்சி எதிர்ப்பு பண்பும் உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வாய் புத்துணர்ச்சிக்கு புதினா முக்கிய பங்காற்றுகிறது. வாய் சுகாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் புதினா பாக்டீரியாக்களுடன் போராடுகிறது.
அலர்ஜியைத் தடுக்கும் ஹிஸ்டமின்கள் புதினாவில் உள்ளது. தும்மல், அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளைத் தடுக்கிறது.
கர்ப்பணி பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் குமட்டல் மற்றும் அஜீரணக் கோளாற்றை புதினா சரி செய்கிறது.
செரிமானத்திற்கு பக்கபலமாக இருந்து குடலைச் சுத்தப்படுத்துவதால் மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்கிறது.
ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிகம் கொண்டு காயமடைந்த சருமத்திற்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.