மேலும் அறிய

TN Vehicle Resale: இனி வாகன ரீசேல் ஈசி கிடையாது..! கிடுக்கிப்பிடி விதிகளை அறிவித்த தமிழ்நாடு அரசு, எவ்வளவு கட்டணம்?

TN Vehicle Resale: வாகன மறுவிற்பனைக்கான விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Vehicle Resale: குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வாகன மறுவிற்பனைக்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன.

வாகன மறுவிற்பனை விதிகள்:

நீங்கள் பயன்படுத்திய உங்களது வாகனத்தை விற்கிறீர்களா? எனில் 10 ரூபாய் மதிப்பிலான நீதித்துறை சாராத முத்திரைத்தாள்களில் போடப்படும், விற்பனைக்கான ஒப்பந்தங்கள் இனி செல்லாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அண்மையில் சென்னையில் அரங்கேறிய இரண்டு குற்றச்சம்பவங்கள் தான் இதற்கு காரணம். ஆம், ஈசிஆரில் பெண்கள் பயணித்த காரை ஒரு கும்பல் துரத்திச் சென்றது மற்றும் கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவங்களில், வாகன எண்ணை கொண்டு உரிமையாளர்களை அடையாளம் காண்பது காவல்துறைக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. காரணம், அந்த வாகனங்கள் பலமுறை மறுவிற்பனை செய்யப்பட்டு இருந்ததே ஆகும்.

போக்குவரத்து ஆணையம் உத்தரவு:

இந்நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர், அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (RTO) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி,  பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கையாளும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி அங்கீகாரச் சான்றிதழைப் பெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

யார் பொறுப்பு?

ஒருமுறை பதிவு செய்துவிட்டால், தனிநபர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் டீலர்கள் தான், அவை அதிகாரப்பூர்வமாக புதிய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றப்படும் வரை, குறிப்பிட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சம்பவத்திற்கும் பொறுப்பாவார்கள். இதைச் செயல்படுத்த, பயன்படுத்தப்பட்ட கார் டீலர்ஷிப்கள் அல்லது பார்க்கிங் இடங்களில் உள்ள வாகனங்கள், அரசாங்கத்தின் வாகன போர்ட்டலில் டீலரின் பெயரில் தற்காலிகமாகப் பதிவு செய்யப்படும், இருப்பினும் இது RC புத்தகத்தில் பிரதிபலிக்காது.

அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் பரிமாற்ற உத்தரவை (Transfer Order) (படிவம்-29) உருவாக்க பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெறுவார்கள். இது முந்தைய உரிமையாளரையும் வாங்குபவரையும் ஆவணப்படுத்தும். தற்போது, ​​இந்த செயல்முறை அரிதாகவே பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்பற்றப்படாத விதிகள்:

தமிழ்நாட்டில் சுமார் 30,000 பயன்படுத்தப்பட்ட வாகன டீலர்கள் உள்ள நிலையில், இதுவரை சுமார் 15 பேர் மட்டுமே தேவையான சான்றிதழைப் பெற்றுள்ளனர். இதனால் இந்தத் துறை பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை, பல டீலர்கள் உரிமை பரிமாற்றங்களைத் தவிர்த்துள்ளர். இந்நிலையில், தற்போது  முன்னெடுக்கப்பட்டுள்ள பதிவு நடவடிக்கையின் மூலம் அதிக டீலர்களைச் சேர்க்க போக்குவரத்துத் துறை முனைப்பு காட்டுகிறது.  அதேநேரம், விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் டீலர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள கெடு விதிக்க வேண்டும் என்றும் துறைசார் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். காரணம், ரூ.25,000 என்ற கட்டணத்தை தாமக செலுத்த யார் தான் முன்வருவார்கள் எனவும் வினவுகின்றனர்.

தனிநபர்களுக்கான ரீசேல் கட்டணம்:

தனிநபர்களும் தங்களது வாகனத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைப்படி கட்டணம் செலுத்தி அதிகாரப்பூர்வமாக ஆவணங்களில் பெயரை மாற்ற வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் அநாவசியமான சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதன்படி,

  • இருசக்கர வாகன ரீசேல் - ரூ.150
  • ஆட்டோ ரிசேல் - ரூ.300
  • கார் ரீசேல் - ரூ.500
  • பேருந்து/ட்ரக் ரீசேல் - ரூ.750
  • இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் - ரூ.1,500 - ரூ.2,500 

தேவையான ஆவணங்கள்:

  • படிவம் 29 - உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் (நகல்)
  • படிவம் 38 - உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் (வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தால்)
  • பான் கார்டு
  • பதிவுச் சான்றிதழ்
  • காப்பீட்டு சான்றிதழ் உமிழ்வு சான்றிதழ்
  • முகவரி ஆதாரம் - ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ரேஷன் கார்டு
  • தடையில்லாச் சான்றிதழ் (NOC)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Embed widget