மேலும் அறிய

EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னார்கள் செய்யவில்லை, அதனால் போராடினார்கள், கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

210 தொகுதிகளில் அதிமுக வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி அடுத்தாண்டு தேர்தலில் 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு இங்கிருக்கும் மக்களின் எழுச்சியே சாட்சி.

அதிமுகவைப் பார்த்து ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அதிமுகவில் கூட்டணி இல்லை என்கிறார். உண்மையில் உங்கள் கூட்டணி பலவீனம் ஏற்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே, காங்கிரஸ் வேறொருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக செய்தி. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும், செல்வப்பெருந்தகையும் ஆட்சியில் பங்கு கேட்போம் என்கிறார்கள். திருமாவும் காலச்சூழலுக்கு ஏற்ப கோரிக்கை வைப்போம் என்கிறார். இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார்.

போதை மாநிலமாக தமிழகம்

ஸ்டாலின் அவர்களே அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 2011-21 வரை 10 ஆண்டுகள் பல்வேறூ திட்டங்கள் கொடுத்தோம். சிறப்பான ஆட்சி வழங்கினோம். மதச்சண்டை, ஜாதிச்சண்டை கிடையாது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இன்று போதை பல்வேறு வடிவங்களில் விற்பனையாகிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலமுறை நாங்கள் சொல்லிவிட்டோம். போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் தான் இந்த நிலைமை.

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் 5% வாக்குறுதி தான் நிறைவேற்றப்பட்டது என்று பச்சைப்பொய் சொல்கிறார். உங்கள் தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்பு வெளியிட்டீர்கள். நான்கில் ஒரு பாகம் கூட நிறைவேற்றவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சிக்கிறார்கள். இப்படி ஆட்சி செய்துவிட்டு அதிமுக மீது பழி சுமத்துகிறீர்கள். அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்த சாதனை, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி 400 கோடியில் கொண்டுவந்தோம், மக்களை நெஞ்சை நிமிர்த்தி சந்திக்கிறோம். உங்களால் ஒரு திட்டமாவது கொண்டுவர முடிந்ததா?

 செவிலியர்கள் பணி நியமனம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, அதனால் போராடுகிறார்கள். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னார்கள் செய்யவில்லை, அதனால் போராடினார்கள், கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். எப்போது கேட்டாலும் நிதி இல்லை என்கிறார் முதல்வர். ஆனால், கார் பந்தயம் நடத்தவும் பேனா வைக்கவும் நிதி இருக்கிறது.

மக்களுக்கு கொடுக்க நிதி இல்லை. எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின், உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மேலும் 17 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். 

அதிமுக ஆட்சியில் விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மேலும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் இவை எல்லாம் தொடரும். திருமண உதவி திட்டம் தொடரும், மணமகனுக்கு பட்டுவேஷ்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களுக்கு தீபாவளி தோறும் சேலை வழங்கப்படும். பட்டியலின, ஏழை, நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

ரூ. 5000 பொங்கல் பரிசு தொகை

கொரோனா காலத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டு காலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன; மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது.

அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார். அதையே திருப்பிச் சொல்கிறோம், ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, ஆட்சி முடியப்போகிறது. இந்த இறுதி கட்டத்தில் இப்போதாவது ஏழை மக்கள் மகிழ்ச்சியோடு தைப்பொங்கல் கொண்டாட 5 ஆயிரம்ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

 

தலைப்பு செய்திகள்

Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget