Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
Tata Car Offers: டாடா நிறுவனத்தின் எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகைகள் நவம்பர் மாதத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது டாடா நிறுவனம். ஒவ்வொரு கார் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை கவர சலுகைகள் வழங்குவது வாடிக்கையாகும். அந்த வகையில் டாடா நிறுவனமும் தனது கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
டாடா எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கியுள்ளது என்பதை கீழே காணலாம்.
1. Tata Harrier - ரூபாய் 1.75 லட்சம்
2. Tata Safari - ரூபாய் 1.75 லட்சம்
3. Tata Altroz - ரூபாய் 1.35 லட்சம்
4. Tata Nexon - ரூபாய் 45 ஆயிரம்
5. Tata Tiago - ரூபாய் 45 ஆயிரம்
6. Tigor - ரூபாய் 45 ஆயிரம்
7. Tata Punch - ரூபாய் 40 ஆயிரம்
8. Tata Curvv - ரூபாய் 40 ஆயிரம்
மேலே கூறிய கார்கள் அனைத்தும் டாடாவின் நம்பகமான படைப்பு ஆகும்.
1. Tata Harrier:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக இன்று திகழ்வது Tata Harrier ஆகும். அதிநவீன வசதி கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.61 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1.75 லட்சம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1956 சிசி திறன் கொண்டது. டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 16.8 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
2. Tata Safari:

டாடா நிறுவனத்தின் பிரபலமான படைப்பு Tata Safari ஆகும். சொகுசு காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 18.43 லட்சம் ஆகும். இந்த காருக்கும் ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 1956 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 16.3 கி.மீட்டர் மைலேஜ் கொண்டது.
3. Tata Altroz:
டாடா நிறுவனத்தின் முக்கியமான காராக Tata Altroz உள்ளது. பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த கார் முதன்மைத் தேர்வாக உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.56 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1.35 லட்சம் வரை சலுகை அளித்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது.
4. Tata Nexon:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக இருப்பது Tata Nexon. இ்ந்த காருக்கு நவம்பர் மாத சலுகையாக ரூபாய் 45 ஆயிரம் வரை சலுகை அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.74 லட்சம் ஆகும். பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.

5.Tata Tiago:
டாடா நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார்களில் ஒன்று Tata Tiago ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய 5.49 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 45 ஆயிரம் வரை சலுகை அளித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1199 சிசி திறன் கொண்டது. 19.01 கி.மீட்டர் மைலேஜ் ஆற்றல் கொண்டது.
6. Tata Tigor:
டாடா நிறுவனத்தின் பட்ஜெட் கார்களில் முக்கியமானது இந்த Tata Tigor ஆகும். இந்த காருக்கும் ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 45 ஆயிரம் வரை சலுகை அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.62 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
7. Tata Punch:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Tata Punch ஆகும். இந்தியாவில் இன்று சக்கைப்போடு போடும் காராக இந்த கார் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.63 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
8. Tata Curvv :
டாடா நிறுவனத்தின் மற்றொரு சிறப்பு வாய்ந்த படைப்பு Tata Curvv ஆகும். இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.51 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை உள்ளடக்கியது. பெட்ரோல், டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
மேற்கூறிய சலுகைகள் வரும் நவம்பர் மாதம் வரை அளிக்கப்பட்டுள்ளது.




















