காலை எழுந்தவுடன் தலைவலி இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மன உளைச்சல்

காலையில் எந்திரிக்கும்போது தலைவலியுடன் ஒரு நாளைத் தொடங்குவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

Image Source: pexels

தூக்கமின்மை மட்டுமல்ல

காலையில் எழுந்தவுடன் தலைவலி இருப்பதற்கு போதுமான தூக்கம் இல்லாமை மட்டும் காரணம் அல்ல. மன அமைதி ஆகியவற்றை பொறுத்தும் அமைகிறது.

Image Source: pexels

தூக்கமின்மை

பெரும்பாலும் இந்த தலைவலிக்கு முக்கிய காரணம் போதுமான தூக்கம் இன்மையே ஆகும். தொடர்ச்சியான போதுமான தூக்கம் இல்லாதது கடும் தலைவலியை ஏற்படுத்தும்.

Image Source: pexels

இரவில் பற்களை கடித்தல்

தூக்கத்தில் நீங்கள் உங்களை அறியாமலே பற்களை கடித்தல். இதற்கு ப்ரூக்ஸிசம் என பெயர். இது முக மற்றும் தாடை தசைகளில் வலியை உண்டாக்கி தலைவலியை காலையில் உண்டாக்கும்.

Image Source: pexels

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

தூக்கத்தின்போது மூச்சுத்திணறுவது மூளையில் ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது. இதுவும் காலை தலைவலிக்கு ஒரு காரணம்.

Image Source: pexels

சீரற்ற தூக்க நேரம்

தூக்க அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உறங்குவது தலைவலியை உண்டாக்கும்.

Image Source: pexels

ரத்த அழுத்த ஏற்ற இறக்கம்

காலை நேரத்தில் ரத்த அழுத்தம் உயர்வதும், குறைவதும் என சிக்கல் உள்ளவர்களுக்கு, பதட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கு எழுந்தவுடன் தலைவலி வரும்.

Image Source: pexels