Tata Curvv: பழைய விலையில், கூடுதல் அம்சங்கள்..! டாடா கர்வின் இரண்டு எடிஷன்களிலும் அப்க்ரேட்கள் - புதுசா என்ன?
Tata Curvv EV: டாடா கர்வின் இன்ஜின் மற்றும் மின்சார கார் எடிஷன்கள் இரண்டிலும் விலை மாற்றம் இன்றி, கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Tata Curvv EV: டாடா கர்வ் கார் மாடலில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா கர்வ் கார் அப்க்ரேட்ஸ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் மற்றும் கர்வ் மின்சார எடிஷன்களில், எக்சிக்யூடிவ் மற்றும் ப்ரீமியம் அம்சங்களை சேர்த்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மறு அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. இன்ஜின் அடிப்படையிலான கர்வ்வின் தொடக்க விலை ரூ.14.55 லட்சம் ஆகவும், மின்சார கர்வ் எடிஷனின் தொடக்க விலை ரூ.18.49 லட்சமாகவும் உள்ளது. அதவாது தற்போதைய அப்க்ரேட்களுக்கு முன்பு இருந்த எக்ஸ்-ஷோரூம் விலை அப்படியே தொடர்கிறது.
இன்ஜின் அடிப்படையிலான கர்வ் காரின் டாப் என்ட் வேரியண்டான அக்கம்ப்லிஸ்டில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம், மின்சார எடிஷனில் அக்கம்ப்லிஸ்ட் மற்றும் எம்பவர்ட் வேரியண்ட்களில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்க்ரேட் செய்யப்பட்ட வேரியண்ட்களும், டீலர்ஷிப் அலுவலகங்களை அடைந்து விநியோகமும் தொடங்கியுள்ளது.
டாடா கர்வ் - புதிய அப்க்ரேட்கள் என்ன?
டாடா கர்வில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்களை பற்றி பேசுகையில், இரண்டு எடிஷன்களிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக பாசிவ் வெண்டிலேஷன், செரெனிடி ஸ்க்ரீன் ரியர் சன்ஷேட்கள் மற்றும் ஆர்ம்ரெஸ்டில் ஈசி-சிப் கப் டாக்ஸ் ஆகியவற்றுடன் கூடிய R-கம்ஃபர்ட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கூபே எஸ்யுவியில் கூடுதலாக ட்வின் ஜோன் க்ளைமேட் கன்சீர்ஜ் ஏர் கன்டீஷனிங் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. அதேநேரம், மின்சார எடிஷனில் ப்யூர் கம்ஃபோர்ட் ரியர் கோ-பேசஞ்சர் ஃபுட்ரெஸ்ட் மற்றும் எர்கோவிங் ஹெட்ரெஸ்ட் ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
டேஷ்போர்டானது வெள்ளை கார்பன் ஃபைபர் ஃபினிஷிங்கை பெறுகிறது. ஒட்டுமொத்த அப்ஹோல்ஸ்ட்ரி ஆனது ப்ளஷ் - பெனெக்கே லெதரேட் இருக்கைகளை, லைட்டர் ஷோடில் கொண்டுள்ளது. இன்ஜின் அடிப்படையிலான கர்வ் ஆனது மேம்படுத்தப்பட்ட ATLAS ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மின்சார எடிஷனானது acti.ev ஆர்கிடெக்ட்சரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கர்வின் இரண்டு எடிஷன்களும் 500 லிட்டர் பூட் கெபாசிட்டியை பெற்றுள்ளது.
டாடா கர்வ் - அம்சங்கள் என்ன?
எஸ்யுவி கூபேவில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களில் மூட் லைட்டிங் உடன் கூடிய வாய்ஸ் கன்ட்ரோல் பனோரமிக் சன்ரூஃப், கெஸ்டர் - ஆக்டிவேடட் டெயில்கேட், 12.3-இன்ச் ஹர்மன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் Arcade.ev. ஆகியவை அடங்கும். டாடா கர்வ் என்பது நிறுவனத்தின் இன்ஜின் அடிப்படையிலான போர்ட்ஃபோலியோவில் ரேஞ்ச்-டாப்பிங் மாடலாகும். அதே நேரத்தில் மின்சார கார் வரிசையில் ஹாரியர் EVக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
டாடா கர்வ் கார் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வரும் லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தால், வாகனம் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கர்வின் ICE மற்றும் EV பதிப்புகள் இரண்டிலும் உட்புற இடத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.
டாடா கர்வ் - பவர்ட்ரெயின், பேட்டரி
எரிபொருள் அடிப்படையிலான கர்வ் மாடலில், 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் க்ரியோஜெட் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் வாயிலாக அதிகபட்சமாக 118 bhp மற்றும் 170 Nm ஆற்றல் வெளிப்படும். அதே வேளையில், டீசல் எடிஷன் அதிகபட்சமாக 116 bhp மற்றும் 260 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. Curvv காரின் மின்சார எடிஷனை பொறுத்தவரை, 45 kWh மற்றும் 55 kWh பேட்டரி பேக்குகளுடன் 147 bhp மற்றும் 164 bhp ஆற்றலை பெறலாம். இரண்டு பேட்டரி பேக்குகளிலும் டார்க் அவுட்புட் 210 Nm என ஒரே மாதிரியாக உள்ளது.





















