பாதுகாப்பிலும் பட்ஜெட்டிலும் பெஸ்ட்.. Tata Altroz காரின் விலை என்ன? மைலேஜ் என்ன?
Tata Altroz: டாடா ஆல்டரோஸ் காரின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் முக்கியமான கார்களில் ஒன்று Tata Altroz. டாடா தயாரித்த பட்ஜெட் கார்களில் மிகவும் முக்கியமான கார் இந்த கார் ஆகும்.
பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரது தேர்வாக இந்த கார் உள்ளது. இந்த காரின் விலை, தரம், மைலேஜ் மற்றும் சிறப்பம்சம் குறித்து கீழே விரிவாக காணலாம்.
Tata Altroz விலை என்ன?
டாடா நிறுவனத்தின் இந்த Tata Altroz காரின் தொடக்க விலை ரூபாய் 7.56 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை ரூபாய் 13.13 லட்சம் ஆகும். பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும்.
இந்த கார் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை காெண்டது ஆகும். இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்ஜின் கார் 1497 சிசி திறன் கொண்டது ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் திறன் கொண்டது ஆகும். 72 பிஎச்பி மற்றும் 87 பிஎச்பி குதிரைத் திறன் ஆற்றலை கொண்டது இந்த கார் ஆகும்.
மைலேஜ் என்ன?
இந்த கார் 19.33 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த காரில் மொத்தம் 22 வேரியண்ட்கள் உள்ளது. Altroz Accomplished S Diesel 5MT மட்டுமே டீசல் வேரியண்ட் ஆகும். 11 வேரியண்ட்கள் ரூபாய் 10 லட்சத்திற்கும் கீழே உள்ளது. இந்த காரில் 10.25 இன்ச் தொடுதிரை கொண்ட தகவல் டிஸ்ப்ளே உள்ளது. இதில் கூகுள் மேப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த கார் 360 டிகிரி கேமராவையும் கொண்டது. இந்த காரின் பெடரோல் எஞ்ஜின் 1.2 ரெவோட்ரன் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும்.
8 ஆயிரம் ஆர்பிஎம் மற்றும் 115 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது. 6 கியர்களிலும் இந்த கார் உள்ளது. வயர்லஸ் சார்ஜரை கொண்டது. எச்டி சவுண்ட் சிஸ்டம் கொண்டது. ப்ளைண்ட்ஸ்பாட் மானிட்டர், ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள். மழை சென்சார் வைப்பர்ஸ் உள்ளது. டைப் சி சார்ஜர் வசதியும் இதில் உள்ளது. 345 லிட்டர் டிக்கி வசதி உள்ளது.
பாதுகாப்பு வசதி:
6 ஏர்பேக்குள் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளது. ஏபிஎஸ் வசதி உள்ளது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. ஆட்டோ பார்க் லாக் வசதியும் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. இந்த காரின் வடிவமும், தோற்றமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கார் சிவப்பு, நீலம், வெள்ளை உள்பட 5 வண்ணங்களில் உள்ளது. இருக்கைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சாலைகளில், நெடுஞ்சாலைகளில் செல்ல மிகவும் உகந்த காராக இந்த கார் உள்ளது. இந்த காருக்கு பயனாளர்கள் 5க்கு 4.8 சதவீதம் வழங்கியுள்ளனர்.





















