கைவசம் பல ப்ளான்! உலகளாவிய ஆராய்ச்சி.. இந்தியாவில் ஆழமாக கால்பதிக்கும் சுஸுகி!!
இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் வாகணங்களுக்கான பேட்டரிகளை உருவாக்க குஜராத் மாநிலத்தில் ஒரு தனி ஆலையை அமைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுஸுகி நிறுவனம் இந்தியாவில் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை அமைக்கும் என்று அதன் தலைவர் நேற்று தெரிவித்தார். இது சுஸுகி நிறுவனத்தை மின்சார வாகன (EV) தயாரிப்பு மையமாக மாற்றுவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனத்தில் கவனம்
இந்தியாவில் அதன் உள்ளூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி ஏற்றுமதிக்காக ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை உருவாக்கி வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ள எலக்ட்ரில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் வாகணங்களுக்கான பேட்டரிகளை உருவாக்க குஜராத் மாநிலத்தில் ஒரு தனி ஆலையை அமைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறன்களை வலுப்படுத்துகிறது
ஜப்பான் சுஸுகியின் முழு உரிமையாளரான இந்த புதிய நிறுவனம், இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் கார் தயாரிப்பாளரின் R&D போட்டித்திறன் மற்றும் பல திறன்களை வலுப்படுத்தும் என்று டோஷிஹிரோ சுஸுகி குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில் ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.
டோஷிஹிரோ சுஸுகி
மேலும், "சுஸுகி குழுமத்தில் உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சுஸுகி இந்திய நாட்டில் அதிக முதலீடுகளைத் தொடரும். சுஸுகி ஜப்பானின் டென்சோ கார்ப் மற்றும் தோஷிபா கார்ப் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது" ,என்று டோஷிஹிரோ சுஸுகி கூறினார்.
SUV கார்களில் கவனம்
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸுகி, இந்தியாவில் அதன் மின்மயமாக்கல் திட்டங்களுக்காக 104 பில்லியன் ரூபாய் ($1.3 பில்லியன்) செலவழிப்பதாகக் கூறியுள்ளது, இது சுஸுகியின் மிகப்பெரிய பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகன முதலீடுகளில் ஒன்றாகும். நாட்டில் ஏற்கனவே 650 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கார் சந்தையில் அதன் சிறிய, குறைந்த விலை வாகனங்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் மாருதியின் பெரும்பான்மை உரிமையாளராக Suzuki உள்ளது. ஆனால், வாங்குவோர் ஸ்போர்ட்ஸ்-யுட்டிலிட்டி வாகனங்கள் (SUV) போன்ற பெரிய கார்களுக்கு மாறுவதால், நிறுவனம் வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொள்கிறது. பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத கார்களைக் உற்பத்தி செய்ய செலவுகள் அதிகம் ஆவதால் இதுபோன்ற நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஊக்கத்தொகையாக வழங்குவதன் மூலம் அதிக மின்சார கார்களை உருவாக்க கார் தயாரிப்பாளர்களை இந்தியா தூண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.