மேலும் அறிய

Suzuki Gixer: சுசுகி நிறுவனம் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட ஜிக்சர் வாகனங்கள்..விலை விவரங்கள் அறிவிப்பு

சுசுகி நிறுவனம் இரண்டு புதிய வகை மேம்படுத்தப்பட்ட ஜிக்சர் வகை மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜிக்சர் சீரிஸ்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உள்நாட்டு சந்தையில்  ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப்,  ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் 250 எஸ்எஃப் ஆகிய மாடல்களில், ஜிக்சர் சீரிஸ் மோட்டர்சைக்கிளை விற்பனை செய்து வருகின்றன. அந்த மோட்டார்சைக்கிள்கள் 9 நிறங்களில் சந்தையில் கிடைக்கப் பெறுகின்றன. இதில் 3 மேட் எடிஷன் மோட்டார் சைக்கிள்களும் அடங்கும். அவற்றின் ஆரம்ப விலை ரூ.1.4 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 2.02 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல் மோட்டர் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வண்ணங்களில் ஜிக்சர் சீரிஸ்

ஜிக்சர் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மிட்-லைஃப் அப்டேட் மூலம் அதன் விற்பனை மற்றும் ஆயுளை நீட்டிக்க சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேக்கட் மற்றும் ஃபேர்டு என இருவித டிசைனிங்கில் புதிய நிறங்களில் அறிமுகமாகி உள்ளன. சிறிய 155சிசி ஜிக்சர் மாடல் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் பூளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான 2023 சுசுகி ஜிக்சர் SF 250 தற்போது மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No. 2 மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடான் புளூ ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் No.2 நிறங்களில் கிடைக்கிறது. 

இன்ஜின் விவரங்கள்:

சுசுகி ஜிக்சர் 250சிசி மாடலில் 249சிசி, சிங்கில் சிலண்டர், ஆயில் கூல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.13 ஹெச்பி பவர், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.  இதன் 155சிசி மாடலில் சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 13.41 ஹெச்பி பவர், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

சிறப்பம்சங்கள்:

 2023 மாடல்களில் சுசுகி நிறுவனம் சுசுகி ரைட் கனெக்ட் வசதியை வழங்கி உள்ளது. இது மோட்டார்சைக்கிள்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை வழங்கும். இத்துடன் எஸ்.எம்.எஸ் அலெர்ட், மிஸ்டு கால் நோட்டிஃபிகேஷன், ஓவர்ஸ்பீடிங் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான ஸ்மார்ட்போன் செயலியை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதேநேரம், புதிய ஜிக்சர் சீரிசில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

விலை விவரம்:

2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் சோனிக் சில்வர், மெட்டாலிக் ட்ரிடான் புளூ - ரூ. 2,02,500

2023 நேக்கட் ஜிக்சர் 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 ரூ. 1,95,000

2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 - ரூ. 2,02,000

2023 சுசுகி ஜிக்சர் SF - ரூ. 1,45,500

2022 சுசுகி ஜிக்சர் நேக்கட் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் புளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் ரூ. 1, 40,500 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Embed widget