(Source: ECI/ABP News/ABP Majha)
Skoda Kylaq: எஸ்யுவி வாங்க ஆசையா? புதுசா வருது ஸ்கோடா கைலாக் சப் 4 மீட்டர் - எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
Skoda Kylaq: ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக, சப் 4 மீட்டர் எஸ்யுவியை அறிமுகப்படுத்த உள்ளது
Skoda Kylaq: ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள, சப் 4 மீட்டர் எஸ்யுவி கைலாக் என குறிப்பிடப்படுகிறது.
ஸ்கோடா கைலாக் எஸ்யுவி:
எதிர்காலத்தில் புதிய எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான செய்தி தான் இது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வாடிக்கையாளர்களிடையே காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, ஸ்கோடா ஆட்டோ தனது முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவியை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நிறுவனத்தின் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவியின் பெயர் ஸ்கோடா கைலாக் ஆகும்.
வடிவமைப்பு விவரங்கள்:
வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் இந்திய சாலைகளில் சோதனையின் ஓட்டத்தின்போது பல முறை சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அண்மையில் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வரவிருக்கும் எஸ்யூவியின் முன்புறம் போல்டான கிரில், மெலிதான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. எஸ்யூவியின் பின்புறம் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் சங்கி (chunky ) பம்பர் கொண்டிருக்கும். வரவிருக்கும் ஸ்கோடா கைலாக்கின் சாத்தியமான அம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை பற்றி விரிவாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா கைலாக் அம்சங்கள்:
வாகனத்தின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், 10.25-இன்ச் தொடுதிரை, முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஒற்றை-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
ஸ்கோடா கைலாக் பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்தியாவில் விற்பனையில் உள்ள நிறுவனத்தின் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவை குடும்ப பாதுகாப்பிற்கான க்ராஷ் டெஸ்டில் குளோபல் என்சிஏபியால் 5-நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இப்போது நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்யூவியிலும் இது கிடைக்கும். வரவிருக்கும் ஸ்கோடா சப்-4 மீட்டர் SUV MQB AO IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சந்தையில், வரவிருக்கும் புதிய எஸ்யூவி டாடா நெக்ஸான், பஞ்ச், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ஸ்கோடா கைலாக் இன்ஜின் விவரங்கள்:
புதிய கைலாக் கார் மாடல், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறும். இது அதிகபட்சமாக 115bhp மற்றும் 178Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். காரின் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்படும்.
ஸ்கோடா கைலாக் விலை:
விலையைப் பற்றி பேசினால், வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை டாப் மாடலில் ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கலாம். புதிய ஸ்கோடா சப்-4 மீட்டர் SUV 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.