தொடக்க விலையே ரூ.9 லட்சம்தான்.. மைலேஜ், தரத்தில் மாஸ் காட்டும் Skoda Kylaq!
ஸ்கோடா நிறுவனத்தின் Skoda Kylaq காரின் விலை, மைலேஜ் மற்றும் தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய், மாருதி சுசுகி என்று பல்வேறு பிரபலமான கார் நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென தனி செல்வாக்கை வைத்துள்ள கார் நிறுவனம் Skoda ஆகும். மைலேஜ், கட்டமைப்பு, வசதிகள் என ஸ்கோடா நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி செல்வாக்கைப் பெற்றுள்ளது.
Skoda Kylaq:
ரூபாய் 15 லட்சம் பட்ஜெட்டில் மிகவும் தரமான கார் ஒன்றை ஸ்கோடா தன்வசம் வைத்துள்ளது. அதுதான் Skoda Kylaq ஆகும். இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கேபின் வாடிக்கையாளரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை என்ன?
கடந்தாண்டு Skoda Kylaq அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 8.91 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 15.75 லட்சம் ஆகும். Kylaq Classic, Kylaq Signature, Kylaq Signature AT, Kylaq Signature Plus, Kylaq Signature Plus AT, Kylaq Prestige மற்றும் Kylaq Prestige AT ஆகிய 7 வேரியண்ட்கள் உள்ளது.
Kylaq Classic - ரூ. 8.91 லட்சம்
Kylaq Signature - ரூ.10.59 லட்சம்
Kylaq Signature AT - ரூ.11.75 லட்சம்
Kylaq Signature Plus - ரூ.12.76 லட்சம்
Kylaq Signature Plus AT - ரூ.13.98 லட்சம்
Kylaq Prestige - ரூ.14.58 லட்சம்
Kylaq Prestige AT - ரூ.15.75 லட்சம்
இந்த கார் 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.19.68 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராக இது உள்ளது. 114 பிஎச்பி ஆற்றல் கொண்டது. இந்த கார் ஸ்கோடாவின் முக்கிய தயாரிப்பான ஸ்கோடா குஷக்கின் மினி வெர்சனாகவே கருதப்படுகிறது. 17 இன்ச் அலாய் சக்கரம் கொண்டுள்ளது. 189 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இருக்கைகள் பயணிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
வசதிகள்:
இந்த காரில் 6 கியர்கள் வரை உள்ளது. 178 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 10 இன்ச் தொடுதிரை இதில் உள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் பல்வேறு தகவல்கள் அடங்கிய வசதிகள் ?உள்ளது. வயர்லஸ் போன் சார்ஜர் உள்ளது. சி டைப் சார்ஜருக்கான வசதியும் உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோலும் இந்த காரில் உள்ளது. எஞ்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் ஆப்சனை கொண்டது.
இந்த காரின் டிக்கி 446 லிட்டர் இடவசதியை கொண்டது. இந்த கார் என்சிஏபி-யின் 5 ஸ்டார் பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. ஓட்டுனர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது.
போட்டி:
ABS, EBD, ESC வசதியும் இந்த காரில் உள்ளது. ஹில் ஹோல்ட் வசதியும் இந்த காரில் உள்ளது. பார்க்கிங் சென்சார் இதில் உள்ளது. டயர் மானிட்டரிங் வசதியும் இதில் உள்ளது. இந்த காருக்கு இந்த காரின் பயனாளர்கள் 5க்கு 4.8 ஸ்டார் வசதி வழங்கியுள்ளனர். இந்த கார் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஹுண்டாய் வெனுயூ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.
சந்தையில் இந்த கார் தொடர்ந்து நல்ல விற்பனையாகி வருகிறது. பாதுகாப்பு, தரம், மைலேஜ், பிக்கப் போன்ற காரணங்களுக்காக இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.





















