ரூ.81 ஆயிரம் வரை விலையை குறைத்த Renault Triber.. எந்த வேரியண்ட் இனி எவ்வளவு?
ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு ரெனால்ட் நிறுவனம் தனது Triber காருக்கு விலையை குறைத்துள்ளது. அதன் வேரியண்ட்களின் பழைய விலை, புதிய விலை, எவ்வளவு குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு நிறுவனமும் தனது விலையை குறைத்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை அதிரடியாக குறைத்து வருகிறது.
இந்த நிலையில், ரெனால்ட் நிறுவனமும் தனது Triber கார்களுக்கு விலையை குறைத்துள்ளது. ட்ரைபர் காரின் எந்த வேரியண்ட்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு? என்பதை கீழே காணலாம்.
1. Authentic - ரூ. 53 ஆயிரத்து 695
2. Evolution - ரூ. 61 ஆயிரத்து 795
3. Techno - ரூ.68 ஆயிரத்து 195
4. Emotion - ரூ.73 ஆயிரத்து 795
5. Emotion AMT - ரூ. 78 ஆயிரத்து 195
6. Emotion MT DT - ரூ.75 ஆயிரத்து 695
7. Emotion AMT DT - ரூ.80 ஆயிரத்து 195
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
1. Authentic:
ரெனால்ட் ட்ரைபர் Authentic காரின் பழைய விலை ரூபாய் 6 லட்சத்து 29 ஆயிரத்து 995 ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 76 ஆயிரத்து 300 ஆகும். இந்த வேரியண்ட் தற்போது 53 ஆயிரத்து 695 குறைவாக விற்கப்பட உள்ளது.
2. Evolution:
ரெனால்ட் ட்ரைபர் Evolution காரின் பழைய விலை ரூபாய் 7 லட்சத்து 24 ஆயிரத்து 995 ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 6 லட்சத்து 63 ஆயிரத்து 200 ஆகும். இந்த கார் ரூபாய் 61 ஆயிரத்து 795 குறைந்துள்ளது.
3. Techno:
ரெனால்ட் ட்ரைபர் Techno காரின் புதிய விலை ரூபாய் 7 லட்சத்து 99 ஆயிரத்து 995 ஆகும். ரூபாய் 68 ஆயிரத்து 195 குறைக்கப்பட்டு ரூபாய் 7 லட்சத்து 31 ஆயிரத்து 800 குறைந்துள்ளது.
4. Emotion:
ரெனால்ட் ட்ரைபரின் Emotion கார் ரூபாய் 8 லட்சத்து 64 ஆயிரத்து 995 ஆகும். இந்த கார் ரூபாய் 73 ஆயிரத்து 795 குறைக்கப்பட்டு ரூபாய் 7 லட்சத்து 91 ஆயிரத்து 200-க்கு விற்கப்படுகிறது.
5. Emotion AMT:
ரெனால்ட் ட்ரைபரின் Emotion AMT காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 16 ஆயிரத்து 995 ஆகும். இந்த கார் ரூபாய் 78 ஆயிரத்து 195 குறைக்கப்பட்டு இனி ரூபாய் 8 லட்சத்து 38 ஆயிரத்து 800-க்கு விற்கப்படுகிறது.
6. Emotion MT DT:
ரெனால்ட் ட்ரைபரின் Emotion MT DT காரின் தொடக்க விலை ரூபாய் 8 லட்சத்து 87 ஆயிரத்து 995 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 75 ஆயிரத்து 695 குறைக்கப்பட்டு தற்போது ரூபாய் 8 லட்சத்து 12 ஆயிரத்து 300க்கு விற்கப்படுகிறது.
7. Emotion AMT DT:
ரெனால்ட் ட்ரைபரின் Emotion AMT DT காரின் பழைய விலை ரூபாய் 9 லட்சத்து 39 ஆயிரத்து 995 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 80 ஆயிரத்து 195 குறைக்கப்பட்டு ரூபாய் 8 லட்சத்து 59 ஆயிரத்து 800க்கு இனி விற்கப்படும்.
5 மற்றும் 7 சீட்டர் வாகனமான இந்த ரெனால்ட் ட்ரைபர் 1 லிட்டர் எஞ்ஜின் கொண்டது ஆகும். இது 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 3 சிலிண்டர்களை உள்ளடக்கியது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது இந்த ரெனால்ட் ட்ரைபர்.
72 பிஎஸ் ஆற்றலுடன் 96 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 32 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 3 ஆயிரத்து 985 மி.மீட்டர் நீளமும், 1734 மி.மீட்டர் அகலமும், 1643 மி.மீட்டர் உயரமும் கொண்டது ஆகும். 40 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் டேங்கர் உள்ளது.
முன்பக்கம், பக்கவாடு முழுவதும் ஏர்பேக் வசதி உள்ளது. ஏபிஎஸ் வசதியும், எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி வசதி, அதிவேக எச்சரிக்கை வசதி, மழையில் வைபர் சென்சார் வசதிகள் இதில் உள்ளது.
டேஷ்போர்டில் 20.32 செ.மீட்டர் டிஸ்ப்ளே உள்ளது. இதில் கூகுள் மேப் வசதி, செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தொடு திரை எனப்படும் டச் ஸ்கிரீனாக இது உள்ளது.




















