மேலும் அறிய

PURE EV ecoDryft: pure ev நிறுவனத்தின் மின்சார மோட்டர் சைக்கிள் அறிமுகம்.. 130 கி.மீ. ரேன்ஜ், இதுதான் செம்ம விலை..!

இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன நிறுவனமான PURE EV, தனது ecoDryft மாடல் மோட்டார் சைக்கிளின் வெளியீட்டு விலையை அறிவித்துள்ளது

இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன நிறுவனமான PURE EV,  தனது ecoDryft மாடல் மோட்டார் சைக்கிளின் வெளியீட்டு விலையை அறிவித்துள்ளது. ஐதராபாத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதோடு, அந்த நகரில் உள்ள PURE EV இன் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையத்தில் ecoDryft மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இந்த முதல் மின்சார பைக்கின் விலை, டெல்லிக்கு மட்டும் பிரத்யேகமாக ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிளின் விலை, ரூ.1,14,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-ரோடு விலை என்பது அந்தந்த மாநில அளவிலான மானியங்கள் மற்றும் RTO கட்டணங்களைப் பொறுத்து மாறுபடும்.

செயல்திறன்:

ecoDryft  மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும். அத்துடன் டிரைவ்-ரெய்னில் AIS 156 சான்றளிக்கப்பட்ட 3.0 KWH பேட்டரி, ஸ்மார்ட் BMS மற்றும் புளூடூத் இணைப்புடன், 3 kW மோட்டார் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும். 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும்.

ட்ரைவ் மோட்:

இந்த வாகனத்தை மூன்று டிரைவிங் மோடுகளுடன் இயக்கலாம்.  அதன்படி புதிய இகோட்ரிஃப்ட் மோட்டார்சைக்கிளானது டிரைவ், கிராஸ் ஒவர் மற்றும் த்ரில் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள டிரைவ் மோட் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும். கிராஸ் ஒவர் மோடில் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், த்ரில் மோட் மணிக்கு அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் மின்சார மோட்டார் 4.2 ஹெச்பி திறனை வெளிப்படுத்துகிறது.

டெலிவெரி எப்போது:

இந்திய சந்தையில் இந்த ecoDryft மின்சார மோட்டார் சைக்கிளானது கருப்பு, சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கப் பெறுகிறது. Pure EV ecoDryft க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மார்ச் முதல் வாரத்தில் வாகனங்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள  பியூர் EV நிறுவனம் தரப்பு, நாட்டின் இருசக்கர வாகன விற்பனையில் 65% பயண மோட்டார் சைக்கிள்களாகவே இருப்பதால்,  ecoDryft இன் வெளியீடு பெரிய அளவிலான மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலக்கு?

கடந்த இரண்டு மாதங்களில் பியூர் EV நிறுவனம் 100+ டீலர்ஷிப்களான PAN இந்தியா முழுவதும் டெமோ வாகனங்களை டெஸ்ட் டிரைவ்களுக்காகப் பயன்படுத்தியுள்ளது.  இந்த பிராண்ட் இந்தியாவின் அனைத்து முன்னணி நகரங்களிலும் தனது டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் பியூர் EV நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget