இ ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? Ola S1 X vs Simple Dot One ரெண்டுல எது பெஸ்ட் - இதுதான்!
Ola S1 X மற்றும் Simple Dot One இரண்டு இ ஸ்கூட்டரில் எது சிறந்த இ ஸ்கூட்டர் என்பதை கீழே விரிவாக காணலாம்.

மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆயத்தம் காட்டி வருகிறது.
மின்சார ஸ்கூட்டரான இ ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா எஸ் 1 X மற்றும் சிம்பிள் டாட் ஒன் விற்பனையில் அசத்தி வருகின்றன. இந்த இரண்டு இ ஸ்கூட்டரில் எது வாங்கலாம்? என்பதை கீழே காணலாம்.
மைலேஜ்:
ஓலா நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டராக Ola S1 உள்ளது. இந்த Ola S1 X 3 வகையான பேட்டரியில் விற்பனைக்கு வருகிறது. 2 கிலோ வாட் பேட்டரி, 3 கிலோ வாட் பேட்டரி மற்றும் 4 கிலோ வாட் பேட்டரியில் இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 2 கிலோ வாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 108 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். 3 கிலோ வாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 176 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். 4 கிலோவாட் பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கி.மீட்டர் வரை பயணிக்கலாம்.

Simple Dot One இ ஸ்கூட்டரின் பேட்டரி ஒரே வடிவத்தில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 8.5 கிலோவாட் ஆற்றல் கொண்டது ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும்.
விலை:
Ola S1X அதன் பேட்டரி வடிவத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோவாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1.04 லட்சத்து 990க்கு விற்கப்படுகிறது. 3 கிலோ வாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 168க்கு விற்கப்படுகிறது. 4 கிலோ வாட் பேட்டரி கொண்ட Ola S1X ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 490க்கு விற்கப்படுகிறது. Simple Dot One இ ஸ்கூட்டரின் ஆன் ரோட் விலை ரூபாய் 1.66 லட்சம் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
Simple Dot One இ ஸ்கூட்டர் 80 சதவீதம் சார்ஜ் ஏறுவதற்கு 3 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். இதன் எடை 126 கிலோ ஆகும். மணிக்கு 105 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.

Ola S1 X சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 101 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 105 கிலோ எடை கொண்டது ஆகும். 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கி.மீட்டர் பேட்டரிக்கு வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வசதிகள்:
ப்ளூடூத் வசதிகள் இந்த இரண்டு இ ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்தி அலர்ட் வசதி உள்ளது. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. Simple Dot One இ ஸ்கூட்டரில் ரிமோட் மூலம் ஸ்டார்ட் செய்யும் வசதி உள்ளது. இரண்டு இ ஸ்கூட்டரிலும் 1 பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டிலும் கூகுள் மேப் வசதி உள்ளது.
இந்த இரண்டு இ ஸ்கூட்டர்களும் விதவிதமான வண்ணங்களில் சந்தையில் விற்பனையில் உள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த இரண்டு இ ஸ்கூட்டர்களில் தங்களுக்கு ஏற்ற வாகனங்களை வாகன ஓட்டிகள் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.




















