New SUV launching: 2024ல் எஸ்யுவி வாங்கனும்னு திட்டம் இருக்கா? இதோ உங்களுக்கான பட்டியல்..!
New SUV launching: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள எஸ்யுவி கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்
New SUV launching: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள, எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
எஸ்யுவி கார்கள்:
வழக்கமான கார் வாங்குவதை விட ஆஃப்-ரோடிலும் பயன்படுத்தக் கூடிய திறன் வாய்ந்த எஸ்யுவிக்கள் மீதான ஆர்வம் பயனாளர்களிடையே அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டே பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், புதுப்பிது எஸ்யுவி கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு எஸ்யுவி கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 2024ம் ஆண்டு வெளியாக உள்ள எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மட்டுமின்றி, இந்திய சந்தையில் முதன்முறையாக அறிமுகமாகவுள்ள சில கார்களும் அடங்கும். அதன்படி, கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், ஃபெராரி புரோசாங்யூ, மசெராட்டி கிரேகேல் போன்ற எஸ்யுவி கார்களும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.
ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட்:
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 1.10 கோடி-1.40 கோடி
வெளியீடு: ஆரம்ப 2024
இன்ஜின்: 3.0-லிட்டர் பெட்ரோல்
ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட்டில் காஸ்மெட்டிக் மேம்பாடுகள் தவிர, எச்டி மேட்ரிக்ஸ் எல். ஈ.டி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது.
ஃபெராரி புரோசாங்கு
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 6 கோடி
வெளியீடு: ஆரம்ப 2024
இன்ஜின்: 6.5 லிட்டர் பெட்ரோல்
725hp மற்றும் 716Nm உற்பத்தி செய்யும் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 8-ஸ்பீடு டிரான்சாக்சில் டூயல்-கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸைப் பெறுகிறது, 3.3 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 310 கிமீ வேகத்தை எட்ட முடியும்.
ஃபோர்ஸ் கூர்க்கா 5-கதவு
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 15 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.6-லிட்டர் டீசல்
ஐந்து கதவுகள் கொண்ட கூர்கா மாடலில் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட வேரியண்டுகளும் விற்பனைக்கு வரலாம்.
ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 11 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 இன் முற்பகுதி
இன்ஜின்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்
ஹூண்டாய் அல்காசர் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 17 லட்சம்-22 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்
புதுப்பிக்கப்பட்ட அல்காசர் ஹூண்டாயின் புதிய டிசைன் மற்றும் ADASஐ பெறும்.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8 லட்சம்-15 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்
இது 5-ஸ்பீடு மேனுவலுடன் 83hp, 1.2-லிட்டர் பெட்ரோல் இன ஜினை தொடர்ந்து பெறும். 120hp, 6-ஸ்பீட் iMT அல்லது 7-ஸ்பீட் இரட்டை கிளட்ச் தானியங்கி உடன் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு iMT அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 115hp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய வேரியண்ட்களும் கிடைக்கிறது.
ரேஞ்ச் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 73 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0-லிட்டர் டீசல்
மஹிந்திரா தார் 5-கதவு
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 16 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2-லிட்டர் டீசல்
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8.5 லட்சம்-15.5 லட்சம்
வெளியீடு: 2024
இன்ஜின்: 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்
உட்புறங்களை மிகவும் விரும்பத்தக்கதாகவும் நவீனமாகவும் மாற்ற மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
மசராட்டி கிரேகேல்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 1.0 கோடி-1.5 கோடி
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 3.0-லிட்டர் டர்போ பெட்ரோல்
2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் GT மற்றும் Modena ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. முதல் மாடல் 300hp ஆற்றலுடன் மணிக்கு 100k கிலோ மீட்டர் வேகத்தை 5.6 வினாடிகளில் அடங்கும். மற்றொன்று 330hp ஆற்றலுடன் மணிக்கு 5.3 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.
Mercedes-Benz புதிய GLC கூபே
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 75 லட்சம்-80 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்
Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 45 லட்சம்-49 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்
Mercedes-Benz GLB ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 65 லட்சம் - 70 லட்சம்
வெளியீடு: 2024ம் ஆண்டு
இன்ஜின்: 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்
மினி கன்ட்ரிமேன் (மூன்றாம் தலைமுறை)
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 50 லட்சம்-67 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்/பேட்டரி: 2.0 பெட்ரோல் /66.45kWh
நிசான் எக்ஸ்-டிரெயில் (4வது தலைமுறை)
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 35 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட்
டாடா கர்வ்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ.14 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
பேட்டரி/இன்ஜின்: TBA /1.2-லிட்டர் பெட்ரோல்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8 லட்சம்-13.5 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்