New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
காம்பாக்ட் SUV பிரிவில் போட்டியிடும் டாடா சியரா, கியா செல்டோஸ் ஆகியவற்றில், சியரா ஒரு பெரிய வீல்பேஸ், பூட் ஸ்பேஸ், கூடுதல் திரைகள் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது.

டாடா சியரா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு புதிய காம்பாக்ட் எஸ்யூவி-க்கள் பற்றி அதிகம் பேசப்படுகின்றன. இரண்டு மாடல்களும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவின் பெரிய பங்கை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அதில் எது அதிக அம்சங்களை கொண்டுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
எந்த SUV பெரியது.?
நீளத்தைப் பொறுத்தவரை, கியா செல்டோஸ் 4460 மிமீ நீளம் கொண்டது. டாடா சியரா 4340 மிமீ நீளம் கொண்டது. இருப்பினும், சியரா 1841 மிமீ அகலத்துடன், 1830 மிமீ அகலம் கொண்ட செல்டோஸை விஞ்சி நிற்கிறது. ஆச்சரியப்படும் விதமாக, சியரா 2730 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் செல்டோஸ் 2690 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. சியராவில் பூட் ஸ்பேஸ் 622 லிட்டர், அதே நேரம், செல்டோஸில் 447 லிட்டர் தான் உள்ளது.
எந்த SUV அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது?
அம்சங்களை பொறுத்தவரை, சியரா 12.3 அங்குல திரைகள், பயணிகளுக்கான கூடுதல் இரட்டை இருக்கைகள், பவர்டு டெயில்கேட், சவுண்ட் பார் உடன் 13 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், நீட்டிக்கக்கூடிய தொடை ஆதரவு, பாஸ் மோட் மற்றும் பல அம்சங்களுடன் பெரிய முன்னிலை வகிக்கிறது.
ஆனால், செல்டோஸில் இந்த அம்சங்கள் இல்லை. அது ஒரு பெரிய குறைபாடு. இரண்டு SUV-க்களிலும் பனோரமிக் சன்ரூஃப், ADAS, இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், இணைக்கப்பட்ட கார் அம்சங்கள் மற்றும் பல உள்ளன. செல்டோஸில் HVAC-க்காக கூடுதல் 5 அங்குல திரை, பக்கவாட்டு பார்க்கிங் சென்சார்கள், 10 வழி பவர் டிரைவர் இருக்கை மற்றும் மெமரி ORVM செயல்பாடு ஆகியவை உள்ளன.
எந்த SUV அதிக சக்தி கொண்டது.?
சியரா காரில் 159bhp கொண்ட 1.5l டர்போ பெட்ரோல் மற்றும் 6 speed TC ஆட்டோமேட்டிக் உள்ளது. சிறிய 106bhp 1.5l NA மற்றும் DCA ஆட்டோமேட்டிக் உள்ளது. மேனுவல் மற்றும் டீசல் கிடைக்கிறது.
செல்டோஸ் காரில் 159bhp 1.5l டர்போவும் கிடைக்கிறது. ஆனால், DCT உடன், மேலும் சிறிய 1.5l NA மற்றும் CVT ஆட்டோமேட்டிக் உடன் 115bhp கொண்ட CVT ஆட்டோமேட்டிக் உள்ளது. டீசலும் உள்ளது.
எந்த SUV அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளது.?
வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பதை வைத்து பார்க்கும் போது, செல்டோஸை விட சியரா மிகவும் அழகாகவும், அதிக அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், காரின் சக்தியை பொறுத்தவரை, இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளன.





















