மேலும் அறிய

Affordable CNG SUV: சிஎன்ஜி எஸ்யுவி கார் வாங்க திட்டமா? மார்ச்சில் மலிவு விலையில் கிடைக்கும் கார்கள் பட்டியல் இதோ..!

Affordable CNG SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாதத்தில் மலிவு விலையில் கிடைக்கும், சிஎன்ஜி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Affordable CNG SUV: மாருதி சுசுகி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் 6 சிஎன்ஜி கார் மாடல்கள் மார்ச் மாதத்தில் மலிவு விலையில் கிடைக்கின்றன.

சிஎன்ஜி கார் மாடல்கள்:

அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலைகள், சிஎன்ஜி வாகனங்களின் தேவையை அதிகரித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது CNG கார்கள் மலிவானவை என்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்பார்ப்புகளை உணர்ந்து, உற்பத்தியாளர்களும் பல்வேறு சிஎன்ஜி கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 2024 இல் இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் CNG SUV கார்களின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

Toyota Hyryder CNG 

தொடக்க விலை: 13.71 லட்சம்

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி, உள்நாட்டில் மிகவும் பிரீமியம் சிஎன்ஜி எஸ்யூவி வாகனமாகும்.  இதன் தொடக்க விலை ரூ 13.71 லட்சமாகும். இருப்பினும், CNG SUV கார் மாடல்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தியாவில் இருப்பதால், இந்தப் பட்டியலில் ஹைரைடர் இணைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1.5-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆனது 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-சிஎன்ஜி பவர்டிரெய்ன் 88hp மற்றும் 122Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது, இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.60கிமீ மைலேஜ் வழங்குகிறது.

Maruti Suzuki Grand Vitara CNG: 

ஆரம்ப விலை: ரூ 13.15 லட்சம்

டொயோட்டா ஹைரைடசார்ந்த மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. டெல்டா மற்றும் ஜெட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் கிராண்ட் விட்டாராவின் தொடக்க விலை ரூ.13.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி, ஹைரைடர் சிஎன்ஜி போன்ற பவர்டிரெய்னையே பெறுகிறது. மார்ச் 2024 இல், கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகிய இரண்டு நடுத்தர அளவிலான SUVகள் மட்டுமே CNG விருப்பத்துடன் வழங்கப்படுகின்றன.

Maruti Suzuki Brezza CNG: 

தொடக்க விலை: ரூ 9.29 லட்சம்

 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள, மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு எஸ்யுவி தான் பிரேஸ்ஸா.  இது நேரடியாக CNG விருப்பத்துடன் கிடைக்கிறது. அதன் மூலம் 88hp மற்றும் 121.5Nm ஆற்றலை உருவாக்குகிறது. பிரெஸ்ஸா CNG ஆனது 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஸ்டேண்டர்டாக கொண்டுள்ளது.  25.51km/kg என்ற மைலேஜை வழங்குகிறது.

Maruti Suzuki Fronx CNG 

தொடக்க விலை: ரூ 8.46 லட்சம்

Maruti Suzuki Fronx CNG காரானது 77.5hp மற்றும் 98.5Nm ஆற்றலை உருவாக்கும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெற்றுள்ளது. CNG பதிப்பு 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது,  28.51km/kg எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது. 

Tata Punch CNG: 

தொடக்க விலை: 7.23 லட்சம்

வழக்கமான சிஎன்ஜி சிலிண்டரை காட்டிலும்,  பூட்டில் அதிக இடத்தை பெற உதவும் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் டாடா பஞ்ச் சிஎன்ஜியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.23 லட்சம் என்ற விலையில், டாடா பன்ச் சிஎன்ஜி இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் இரண்டாவது சிஎன்ஜி எஸ்யூவி ஆகும். இது 1.2-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. 

Hyundai Exter CNG 

தொடக்க விலை: 6.43 லட்சம்

தற்போதைய சூழலில் இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி, மிகவும் மலிவு விலை சிஎன்ஜி எஸ்யூவி ஆக உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.6.43 லட்சம் ஆகும். Maruti Fronx CNG மற்றும் Tata Punch CNG மாடல்களுக்கு போட்டியாக, இதிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு, 69hp மற்றும் 95Nm ஆற்றலை உருவாக்குகிறது.  இது 27.10 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget