மேலும் அறிய

Mercedes CLA Electric: 792KM ரேஞ்சில் மெர்சிடஸின் மான்ஸ்டர் - புக்கிங் எப்போது? 210 கிமீ டாப் ஸ்பீட், 14 இன்ச் ஸ்க்ரீன்

Mercedes CLA Electric Sedan: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது புதிய CLA மின்சார செடான் காரை, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Mercedes CLA Electric Sedan: மெர்சிடஸ் பென்ஸின் CLA மின்சார செடான் காருக்கான முன்பதிவு வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடஸ் பென்ஸின் மின்சார செடான்

மெர்சிடஸ் பென்ஸ் தரப்பில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட CLA மின்சார செடான் மாடல், அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த காருக்கான முன்பதிவு, மார்ச் 10ம் தேதி தொடங்க உள்ளது. புதிய மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள இன்ஜின் அடிப்படையிலான A-Class லிமோசின் உடன்,  EQA மற்றும் EQB ஆகிய மின்சார மாடல்களுக்கான மாற்றாகவும் அமைய உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உள்நாட்டு சந்தையில் விற்பனை நிறுத்தப்பட்ட இந்த கார் மாடலின் பெயரில், முற்றிலுமான மின்சார எடிஷன் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். CLA மின்சார செடான் கார் மாடலின் விலை, 55 லட்சம் தொடங்கி 60 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

CLA மின்சார செடான் - 792கிமீ ரேஞ்ச், 210கிமீ டாப் ஸ்பீட்

800 வோல்ட் மின்சார ஆர்கிடெக்ட்சரை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள, 85KWh 250+ வேரியண்டே இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 792 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் சஸ்பென்ஷன் உள்ளூர் சந்தைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, க்ரவுண்ட் க்ளியரன்ஸும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியின் 93% ஆற்றல் திறம்பட பயன்படுத்த முடியுமாம். 

Mercedes CLA Electric: 792KM ரேஞ்சில் மெர்சிடஸின் மான்ஸ்டர் - புக்கிங் எப்போது? 210 கிமீ டாப் ஸ்பீட், 14 இன்ச் ஸ்க்ரீன்

இதுபோக, பெரும்பாலான மின்சார கார்களில் காண்பதை போன்ற சிங்கிள் ஸ்பீட் ரிடக்‌ஷன் யூனிட் இல்லாமல், இரட்டை ஸ்பீட் கியர்பாக்ஸ் இதில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள மின்சார மோட்டாரானது, 272hp ஆற்றலை உற்பத்தி செய்கிறது.  மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டுகிறது. 240KW திறன் கொண்ட அதிவேகமான டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இதில் அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சூழலில் வெறும் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தலே 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என மெர்சிடஸ் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. 

CLA மின்சார செடான் - 18 இன்ச் வீல்கள், 4723மிமீ நீளம்

வெளிப்புற தோற்றத்தில் CLA மின்சார செடான் காரானது மெல்லிய கூபே வடிவிலான சில்-ஹவுட் தோற்றத்துடன், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் 18 இன்ச் வீல்களை கொண்டுள்ளன. கோடைகாலம் போன்ற சூடான சூழலில் பயணிகளை காக்கும் விதமாக, ஹீட்-ப்ரொடெக்டிவ் கோட்டிங் கொண்ட பெரிய பனோரமிக் க்ளாஸ் ரூஃபை கொண்டுள்ளது. முந்தைய எடிஷனை காட்டிலும் 30 மில்லி மீட்டர் நீளம், 25 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 25 மில்லி மீட்டர் உயரத்தை கூடுதலாக கொண்டுள்ளது. பின்புறத்தில் டெயில் லைட்களுக்கு மத்தியில் முழு அகலத்திற்கான லைட்-பார் இணைக்கப்பட்டுள்ளது. க்ளியர் ப்ளூ, காஸ்மிக் ப்ளாக், போலாட் ஒய்ட், ஆல்பின் க்ரே மற்றும் படகோனியா ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. 

அம்சங்கள் அளவீடுகள்
நீளம் 4,723 மில்லி மீட்டர்
அகலம் 1,855 மில்லி மீட்டர்
உயரம் 1,468 மில்லி மீட்டர்
வீல் பேஸ் 2,790 மில்லி மீட்டர்
வீல் சைஸ் 18 இன்ச்
பூட் ஸ்பேஸ் 405 லிட்டர்
ஃப்ரங்க் 101 லிட்டர்

CLA மின்சார செடான்: 14 இன்ச் டச் ஸ்க்ரீன், 6 சார்ஜிங் போர்ட்

250+ வேரியண்ட் உள்ளூர் சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், இதில் ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக கேபினானது 10.25 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் 14 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன்களை கொண்டு, மெர்சிடஸின் புதிய MB.OS ஆப்ரேடிங் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது.  பயணிகளுக்கான டிஸ்பிளேவில், எல்இடி பேக்லிட் ஸ்டார் லோகோக்களுடன் கூடிய க்ளாஸ் பேனல் உள்ளது. இது ஆம்பியண்ட் லைட்டிங் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 6 100W USB-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை நிலையான அம்சங்களாக வழங்கப்படுகின்றன. பின்புற இருக்கையானது 40:20:40 என்ற விகிதத்தில் மடிக்கும் தன்மையை கொண்டுள்ளது. பல்வேறு டேக்டைல் கன்ட்ரோல்களை உள்ளடக்கிய ஸ்போர்டி ஸ்ரியரிங் வீலும் இடம்பெற்றுள்ளது.

Mercedes CLA Electric: 792KM ரேஞ்சில் மெர்சிடஸின் மான்ஸ்டர் - புக்கிங் எப்போது? 210 கிமீ டாப் ஸ்பீட், 14 இன்ச் ஸ்க்ரீன்

CLA மின்சார செடான் காரானது ஐரோப்பாவில் உட்படுத்தப்பட்ட பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் குறியீட்டை பெற்று அசத்தியுள்ளது. அதேநேரம், இந்தியாவில் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. முன் மற்றும் பக்கவாட்டு ஏர்-பேக்குகளுடன் கூடுதலாக மையப்பகுதியிலும் ஒரு ஏர்-பேக்கை கொண்டுள்ளது. கூடுதலாக கேமரா மற்றும் ரேடார் அடிப்படையிலான லெவல் 2 ADAS வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Mercedes CLA Electric: 792KM ரேஞ்சில் மெர்சிடஸின் மான்ஸ்டர் - புக்கிங் எப்போது? 210 கிமீ டாப் ஸ்பீட், 14 இன்ச் ஸ்க்ரீன்

CLA மின்சார செடான் - உள்ளூர் போட்டியாளர்கள்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் CLA மின்சார செடான் காரானது, உள்ளூர் சந்தையில் 55 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரையிலான விலையை கொண்டிருக்கலாம். பல ப்ரீமியம் கார் மாடல்களிலிருந்து போட்டியை எதிர்கொள்ளலாம். அதன்படி BYD சீல், BMW i4, கியா EV6 ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடலாம். ஒரே மாதிரியான விலை மற்றும் அளவீடுகள் அடிப்படையில் ஹுண்டாய் ஐயோனிக் 6, BMW iX1, வால்வோ EX30 மற்றும் டெஸ்லா மாடல் Y ஆகியவற்றுடன் CLA மின்சார செடான் போட்டியிடலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்

Embed widget