Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்தது போல, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை சந்திப்பாரா என்ற கேள்விக்கு, ட்ரம்பின் கூற்றுகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது நிராகரித்துள்ளார். இந்த முழு விஷயத்தையும் யதார்த்தமாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியது என்ன.?
அல் ஜசீராவின் அறிக்கையின்படி, "ட்ரம்ப் ஒரு சந்திப்பிற்குத் தயாராக இருந்தார் அல்லது சந்திக்க விரும்பினார் என்று ஒரு செய்தியை பார்த்தேன். ஆனால் நாம் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் நிஜ உலகில் வாழ வேண்டும்." என்று அப்பாஸ் அரக்சி கூறியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியது என்ன.?
டெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அது உதவுமானால், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை சந்திக்கத் தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் தனக்கு பிடித்தமான நபர் அல்ல என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், அவ்வாறு சந்திப்பதை அவர் கௌரவமாகவும் மரியாதையாகவும் உணர்வதாக அவர் கூறினார்.
"நான் சந்திக்க விரும்பவில்லை, ஆனால் ஒருவேளை சந்தித்தால், அவரை சந்திப்பதை நான் பெருமையாகக் கருதுவேன். நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். ஆனால், அப்படி வந்தால், ஒருவேளை நான் அவரை சந்திப்பேன். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதைப் பற்றி நான் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை. நான் அதை முன்மொழியவில்லை. சிலர் அதை முன்மொழிந்துள்ளனர். அது நடந்தால், நடக்கும். நான் மரியாதையுடன் நடந்துகொள்வேன்," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலவரத்தை பார்த்தால், ட்ரம்ப் மீண்டும் எண்ணெய் விலை உயர்வை குறைத்து மதிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த போரை தொடர்வதில் ஈரான் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும், அமெரிக்காவில் போருக்கான எதிர்ப்பு சீராக அதிகரித்து வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்
இப்படிப்பட்ட சூழலில், இரு தரப்பும் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் தாக்கும் செயல்களை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரான் ஹார்முஸ் அருகே உள்ள வளைகுடா பகுதியில் ட்ரோன்களை ஏவிய நிலையில், அதனை அமெரிக்க ராணுவம் தடுத்து அழித்துள்ளது. அதோடு, ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ராடார் தளங்களையும் சேதப்படுத்தியுள்ளது. தாக்குதல் அதிகரிக்குமோ என்ன அச்சத்தின் காரணமாக, அதை முறியடிப்பதற்காக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் விளக்கமளித்தது.
ஆனால், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளையும் ஈரான் மறுத்துள்ளது.
இப்படியே போனால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் இடையே நிலவி வருகிறது. ஆனாலும், ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















