Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Top Hybrid Cars: இந்தியச் சாலைகளில் 29 கிலோமீட்டர் வரை அபாரமான மைலேஜ் வழங்கி ஆச்சரியப்படுத்தும் முன்னணி ஹைப்ரிட் கார்களின் விலை, மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகக் காண்போம்.

நம் வாகனச் சந்தையில் அன்றாடம் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வால், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் கவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட்கார்கள் பக்கம் பெருமளவு திரும்பியுள்ளது. குறிப்பாக, வழியில் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், நீண்ட தூரம் நிம்மதியாகப் பயணிக்க ஹைப்ரிட் கார்களே பலரின் முதல் தேர்வாக உள்ளன. இந்தியச் சாலைகளில் 29 கிலோமீட்டர் வரை அபாரமான மைலேஜ் வழங்கி ஆச்சரியப்படுத்தும் முன்னணி ஹைப்ரிட் கார்களின் விலை, மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகக் காண்போம்.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki's new Victoris)
நம்பகமான தோழனான மாருதி நிறுவனத்தின் மாருதி சுஸுகி விக்டோரிஸ், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 29 கி.மீ. வரை மைலேஜ் கொடுத்து மார்க்கெட்டிஸ் மாஸ் காட்டுகிறது.
மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர்
இந்திய எஸ்யூவி சந்தையில் சக்கைப்போடு போடும் இந்த இரண்டு கார்களும் ஏறக்குறைய ஒரே எஞ்சின் அமைப்பைக் கொண்டுள்ளன. ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட இவை ஒரு லிட்டருக்கு சுமார் 27.97 கி.மீ மைலேஜ் தருகின்றன.
இந்த ஹைப்ரிட் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11 லட்சத்தில் தொடங்கி ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்ன அம்சங்கள்?
1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360-டிகிரி கேமரா மற்றும் பெட்ரோல் இன்றி தூய்மையான 'இவி மோடில்' மட்டுமே தனியாக இயங்கும் வசதி உள்ளது.
ஹோண்டா சிட்டி இ-எச்இவி (City e:HEV)
பிரீமியம் செடான் பிரியர்களின் எவர்கிரீன் தேர்வாக ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் திகழ்கிறது. இதன் அதிநவீன தொழில்நுட்பம் ஒரு லிட்டருக்கு 27.13 கி.மீ மைலேஜ் அளித்து பெட்ரோல் செலவைக் குறைக்கிறது.
இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.19 லட்சத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக ஹோண்டா சென்சிங் எனப்படும் லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு நுட்பம், லேன் கீப் அசிஸ்ட், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் சொகுசான உட்புற கேபின் வசதிகள் இதில் நிறைந்துள்ளன.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மாருதி இன்விக்டோ
பெரிய குடும்பங்களுக்கான சொகுசான எம்பிவி ரகப் பயணங்களுக்கு இவை மிகச் சிறந்த தேர்வாகும். பிரம்மாண்டமான காராக இருந்தாலும், ஒரு லிட்டருக்கு 23.24 கி.மீ மைலேஜ் தந்து வாடிக்கையாளர்களை வியக்க வைக்கிறது.
இந்த மாடல்களின் விலை ரூ.25 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை விற்கப்படுகிறது. 7 மற்றும் 8 சீட்டர் தேர்வுகள், கால் நீட்டி அமரும் ஓட்டோமன் இருக்கைகள், பெரிய சன்ரூஃப், 10.1 இன்ச் தொடுதிரை மற்றும் ஏர்பேக்குகள் என ராஜபோக வசதிகள் உள்ளன.
பெட்ரோல் செலவை கணிசமாக மிச்சப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் குறைவான கார்பன் உமிழ்வுடன் சொகுசாகவும் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் சிறப்பான தேர்வு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ட்ரெண்டிங் செய்திகள்























