Mercedes-Benz electric EQG: மெர்சிடஸில் மேலும் ஒரு மின்சார வாகனம் - ஆஃப் ரோட் ரைடுக்கான புதிய EQG
Mercedes-Benz electric EQG: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனமான EQG-யின் கான்செப்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Mercedes-Benz electric EQG: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் G Wagen மாடலின் மின்சார எடிஷனாக, EQG மாடல் சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
Mercedes-Benz electric EQG:
வாகனத்தின் திறன்:
இதர அம்சங்கள், எதிர்பார்ப்புகள்:
ஸ்டைலிங் வாரியாக, EQG அதன் EV நிலையைக் குறிக்கும் பல தனித்துவமான அம்சங்களுடன் வித்தியாசமாகத் தெரிகிறது. முன்புறம் வித்தியாசமான தோற்றத்தையும், ரூஃப் விளக்குகளையும் கொண்டுள்ளது. அது எல்.ஈ.டி ஸ்டிரிப் ஆகும். அதே நேரத்தில் வெவ்வேறு சக்கரங்களையும் கொண்டுள்ளது. மற்ற பெரிய மாற்றம் என்றால் அது பின்புற ஸ்டைலிங் ஆகும். ஏனெனில் இது கேபிள்களை சேமிக்க ஸ்பேர் வீலின் இடத்தில் ஒரு வால்பாக்ஸைப் பெறுகிறது. உட்புறமும் சற்றே வித்தியாசமானதாக உள்ளது. பட்டுப் பொருட்கள் மற்றும் மிகவும் எதிர்காலத் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. EQG இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஸ்லாட்டானது தற்போதைய பெட்ரோல் அல்லது டீசல் G வேகனை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், விலையும் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.