மேலும் அறிய

Maruti Fronx: 35KM மைலேஜ் ஹைப்ரிட் கார் எப்ப தான் வருது..! இழுத்தடிக்கும் மாருதி? விலை, அம்சங்கள், வசதிகள் என்ன?

Maruti Suzuki Fronx Facelift: மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் எடிஷனானது லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் உடன் விரைவில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Maruti Suzuki Fronx Facelift: மாருதி ஃப்ராங்க்ஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில், ADAS உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. 

மாருதி சுசூகி ஃப்ராங்கஸ் ஃபேஸ்லிஃப்ட்:

மாருதி சுசூகியின் ஃப்ராங்க்ஸ் கார் மாடலானது, மிகப்பெரிய அளவிலான முதல் மிட்-லைஃப் அப்டேட்டை பெற உள்ளது. சப் - காம்பேக்ட் க்ராஸ் ஓவர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனுக்கான வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 2027ம் ஆண்டு வாக்கில் இந்த கார் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த மேம்படுத்தப்பட்ட எடிஷனானது தீவிரமாக சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அடிக்கடி பொதுவெளியில் அடையாளம் காணப்படுகிறது. அதன் வாயிலாக காரின் பல்வேறு அம்சங்களை அறிய முடிகிறது. 

ஃப்ராங்கஸ் ஃபேஸ்லிஃப்ட் - ADAS உள்ளிட்ட அம்சங்கள்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட புகைப்படங்கள் மூலமாக  ADAS அம்சத்தின் திருத்தத்திற்கான உபகரணமும், பின்புற பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட LIDAR (ஒளியைக் கண்டறிந்து வரம்பிடல்) யூனிட்டும் பொருத்தப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேம்படுத்துவதற்காக ஃப்ராங்க்ஸில் ADAS தொகுப்பு இணைக்கப்படுவதை உறுதி செய்ய முடிகிறது. இதன்படி, காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆடோமேடிக் எமர்ஜென்சி ப்ரேகிங், லேன் கீப் அசிஸ்ட், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஹை பீம் அசிஸ்ட் போன்ற மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் காரில் இடம்பெற உள்ளன. விலைக்கு நிகரான காரின் மதிப்பை கூட்டுவதற்காக, அப்க்ரேட் செய்யப்பட்ட ஃப்ராங்க்ஸில் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், இருக்கைகளுக்கு புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் புதிய ட்ரிம்கள் ஆகியவற்றை மாருதி சுசூகி வழங்கக் கூடும். தற்போதைய எடிஷனில் உள்ள பல அம்சங்கள் அப்படியே புதிய மாடலிலும் தொடரக்கூடும். இந்த பட்டியலில் ஹெட்-அப் டிஸ்பிளே, க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ரியர் ஏசி வெண்ட்கள், சுசூகி கனெக்டட் கார் அம்சங்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல அம்சங்கள் அடங்கும்.

ஃப்ராங்க்ஸின் ஹைப்ரிட் எடிஷன் தயார்..!

மற்றொரு முக்கிய அப்டேட்டாக, மாருதி சுசூகி நிறுவனம் தனது வெகுஜன சந்தை வாகனங்களுக்காக, உள்நாட்டிலேயே உருவாக்கிய ஒரு வலிமையான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. HEV என்ற கோட்நேமை கொண்ட இந்த சீரிஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்ன், தற்போது மாருதி க்ராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோவில் பயன்படுத்தப்படும் டொயோட்டா அட்கின்சன் வலிமையான ஹைப்ரிட் அமைப்பை விட கணிசமாக அதிக செலவு குறைந்ததாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Maruti Fronx: 35KM மைலேஜ் ஹைப்ரிட் கார் எப்ப தான் வருது..! இழுத்தடிக்கும் மாருதி? விலை, அம்சங்கள், வசதிகள் என்ன?

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் மைலேஜ்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானதாக இருந்தால், இந்த காம்பாக்ட் கிராஸ்-ஓவர் நாட்டிலேயே மிகவும் அதிகம் மைலேஜ் தரும் காராக இருக்கும். தற்போதுள்ள 1.0L டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் மற்றும் 1.2L, நான்கு சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் அப்படியே தொடரக்கூடுமாம். புதிய வலிமையான ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் டாப் வேரியண்ட்களுக்கு ஒதுக்கப்படலாம். அதேசமயம் குறைந்த மற்றும் நடுத்தர ரக மாடல்களுக்கு தற்போதுள்ள பெட்ரோல் இன்ஜின்கள் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்: Cheapest SUV: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி, 19KM மைலேஜ், 4 ஸ்டார் ரேட்டிங் ரூ.6000 போதும் - முழு விவரம்

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் விலை

புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சற்றே மாற்றியமைக்கப்பட்ட க்ரில், மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் போன்ற குறைந்தபட்ச டிசைன் மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. மாருதி சுசூகி, மேம்படுத்தப்பட்ட ஃப்ராங்க்ஸ் வரிசையுடன் புதிய வெளிப்புற வண்ணங்கள் மற்றும் கேபின் தீம் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தக்கூடும். இதன் விலை 7 லட்சத்தில் தொடங்கி 12 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும். குறிப்பாக ஹைப்ரிட் வேரியண்டின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
வரப்போகிறான் ஆஃப்ரோட் அரசன்... லாஞ்ச் மோடில் Royal Enfield Himalayan 750 - எப்போது அறிமுகம்?
வரப்போகிறான் ஆஃப்ரோட் அரசன்... லாஞ்ச் மோடில் Royal Enfield Himalayan 750 - எப்போது அறிமுகம்?
வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget