மேலும் அறிய

Cheapest SUV: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி, 19KM மைலேஜ், 4 ஸ்டார் ரேட்டிங் ரூ.6000 போதும் - முழு விவரம்

Cheapest SUV Nissan Gravite: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி கார் மாடலான நிசான் க்ராவைட் குறித்த முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Cheapest SUV Nissan Gravite: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி கார் மாடலான நிசான் க்ராவைட், அதிகபட்சமாக லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிசான் க்ராவைட் 7 சீட்டர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்கள் மீதான மோகம் என்பது உச்சபட்சத்தில் உள்ளது. ஹேட்ச்பேக் மற்றும் செடான்களுக்கான விலையிலேயே பல தரமான எஸ்யுவி மாடல்கள், முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடும்பமாக பயணிக்க ஏதுவாக நாட்டிலேயே மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் 7 சீட்டர் கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். இந்த எஸ்யுவி ஆனது லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ராவைட் 7 சீட்டர் - விலை விவரங்கள்

நிசான் க்ராவைட்டின் விலை வரம்பானது ரூ.5.65 லட்சத்தி ல் தொடங்கி ரூ.8.35 லட்சம் வரையில் நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனில், ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மொத்தம் 6 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆன் - ரோட் விலையானது சென்னையில் ரூ.6.92 லட்சத்தில் தொடங்கி ரூ.10.95 லட்சம் வரை நீள்கிறது. அதாவது சிறிய ஹேட்ச்பேக் மற்றும் செடானை வாங்கும் செலவிலேயே, ஒரு 7 சீட்டர் எஸ்யுவியை உங்களால் சொந்தமாக்க முடியும்.

க்ராவைட் 7 சீட்டர் - 

ஹேட்ச்பேக், செடான் இல்லாமல் எண்ட்ரி லெவலில் மலிவு விலையில், ஒரு 7 சீட்டரை வாங்க விரும்புவோருக்கு க்ராவைட் நல்ல தேர்வாக இருக்கும். குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் ரூபாயை மட்டும் முன் தொகையாக செலுத்தி, மீதமுள்ள 3.92 லட்ச ரூபாயை வங்கியில் கடனாக பெறுவதாக கொள்வோம். 7 ஆண்டுகளுக்கு 8 சதவிகித வட்டியில் மாதாந்திர தவணை செலுத்த முடிவு செய்தால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் சுமார் 6 ஆயிரத்து 100 ரூபாயை செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம் வட்டியாக மட்டுமே ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை செலுத்துவீர்கள். ஒட்டுமொத்தமாக ரூ.6.93 லட்சம் மதிப்பிலான இந்த காரை, 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். 

க்ராவைட் 7 சீட்டர் - இன்ஜின் விவரங்கள்

க்ராவைட் கார் மாடலானது 1.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட்  பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் வரையிலும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 19.3 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் மைலேஜ் வழங்குகிறது என நிசான் அறிவித்துள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் அதிகபட்சமாக நகரங்களில் லிட்டருக்கு 14 முதல் 16 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் 17 முதல் 18 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்

க்ராவைட் 7 சீட்டர் - 4 ஸ்டார் ரேட்டிங்

விலைக்கு நிகரான அம்சங்களை கொண்டு பாதுகாப்பு பரிசோதனையில் க்ராவைட்டானது 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சார்கள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணத்தை சொகுசாக மாற்றுவதற்கு ஏற்றதாக, நவீன காலத்திற்கு ஏற்ற 3 வரிசை இருக்கைக்ளை பெற்றுள்ளது. கடைசி வரிசை இருக்கையை எளிதில் அகற்றும் வசதி உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய  8 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன், 8 இன்ச் முழுமையான டிஜிட்டல் க்ளஸ்டர், லெதரேட் இருக்கைகள், டூயல் டோன் டேஷ்போர்ட், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான சுதந்திரமான ரியர் ஏசி சிஸ்டம், கூல்ட் க்ளோவ் பாக்ஸ், டூயல் டேஷ் கேம் என ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன.


Cheapest SUV: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி, 19KM மைலேஜ், 4 ஸ்டார் ரேட்டிங் ரூ.6000 போதும் - முழு விவரம்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget