வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக New Bajaj Pulsar N160 S மற்றும் New Bajaj Pulsar N160 SS பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பஜாஜ். இந்த பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் Bajaj Pulsar. இந்தியாவில் சக்கைப்போடு போட்ட இந்த இரு சக்கர வாகனத்தின் புதிய மாடலான New Bajaj Pulsar N160 S மற்றும் N160 SS பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பல்சர் பைக் அறிமுகம்:
இந்த பைக்கில் 164.82 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வால்வு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 18.5 பிஎஸ் ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 60 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பைக்கில் 4 மோட்கள் உள்ளது.
சிறப்புகள்:
ரெயின், ரோட், ஸ்போர்ட் மற்றும் ஆஃப்ரோட் மோட்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு மோட்களுக்கு ஏற்பவும் எஞ்ஜினின் செயல்பாடு மாறும். ஏர் கூல்ட் எஞ்ஜின் ஆகும். இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளது. எலக்ட்ரானிக் த்ரோட்டில் சிஸ்டம் வசதி இதில் உள்ளது. N160 SS பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஆனால், N160 S பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி கிடையாது.
இந்த புதிய பஜாஜ் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த பைக் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்கின் வாடிக்கையாளர்கள் பலரும் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராவ்ல் டெக்னாலஜி வசதி உள்ளது. N160 S பைக்கில் எல்சிடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. N160 SS பைக்கில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது. N160 S பைக்கில் ப்ளூடூத் கனெக்ஷன் வசதி உள்ளது. N160 SS பைக்கில் கூகுள் மேப் வசதி உள்ளது.
வசதிகள்:
இந்த புதிய பைக் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த N160 SS பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 585 ( எக்ஸ் ஷோரூம்), இந்த N160 S பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 511 ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்ஸ் சஸ்பென்சனும், மோனோஷாக் ரியர் சஸ்பென்சன் வசதியும் உள்ளது. டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வசதி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















