Maruti Suzuki | 2022 ஜனவரி.. புதுப்புது அப்டேட்ஸ்.. சர்ர்ரென உயர்கிறது மாருதி கார்களின் விலை.. ஏன்?
புத்தாண்டு வந்துவிட்டால் பலரும் திட்டமிட்டு தங்களின் கார் கனவை நிறைவேற்றிக் கொள்வதுண்டும். அதன்படி இந்த ஜனவரியில் நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், விலையைப் பற்றி ஒரு செய்தி இருக்கிறது.
புத்தாண்டு வந்துவிட்டால் பலரும் திட்டமிட்டு தங்களின் கார் கனவை நிறைவேற்றிக் கொள்வதுண்டும். அதன்படி இந்த ஜனவரியில் நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், விலையைப் பற்றி ஒரு செய்தி இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி பல்வேறு மாடல் கார்களின் விலையையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி விலை படு பயங்கரமாக உயர்ந்து வருவதாலேயே வாடிக்கையாளர்கள் மேல் சுமையைக் கூட்டும் அளவிற்கு கார்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அனைத்து வகை சரக்கு வாகனம் அல்லாத வேரியன்ட் வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது. அதாவது ஈக்கோ வேன் போன்ற போன்ற வாகனத்தின் விலையும் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த ரக வாகனத்தில் ஏர்பேக் அறிமுகம் செய்யப்பட்டதால் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் 3.3% அதிகமாக முடிந்தது. நேற்று டிசம்பர் 2 ஆம் தேதி Eeco variant வாகனங்களின் விலை ரூ.8000 வகை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பர் மாதமும் விலை உயர்வை மாருதி சுசுகி செய்தது குறிப்பிடத்தக்கது.
செமி கன்டக்டர் பற்றாக்குறையால் மாருதி சுசுகி நிறுவனம் தனது உற்பத்தையை குறைக்க நேர்ந்தது. இதனால் நவம்பர் மாதம் மாருதி சுசுகி கார் விற்பனை சரிந்தது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுசுகி 1,39,184 கார்களை விற்பனை செய்தது. இது கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,53,223 கார்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. இதுதவிர நவம்பர் 2021 வரை உள்நாட்டு விற்பனை 1,13,017 என்றளவில் உள்ளது. அதே வேளையில் நவம்பர் மாதத்தில் மட்டும் கார் ஏற்றுமதி 21,393 என்றளவில் அமைந்தது.
எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பற்றாக்குறையால், கடந்த மாதம் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் விற்பனையில் தெரியாமல் இருக்கும் அளவிற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டும் உற்பத்தி சரிவை குறைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், காருக்குத் தேவையான எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானா, குஜராத் தொழிற்சாலைகளில் டிசம்பர் 2021லும் கூட உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுசுகி மோட்டார் குஜராத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எலக்ட்ரானிக் உபகரணங்களின் பற்றாக்குறையாலும், செமிகன்டக்டர் பற்றாக்குறையாலும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு, கார் உற்பத்தியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். ஹரியானா, குஜராத் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.