Mahindra XUV 7xo: அறிமுகமானது Mahindra XUV 7X0.. 540 டிகிரி கேமரா வசதி - ஆரம்ப விலை எவ்வளவு?
Mahindra XUV 7XO Launched: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா XUV 7XO கார் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 13.66 லட்சம் ஆகும்.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக உள்ளது. எஸ்யூவி கார்கள் என்றாலே இந்தியாவில் மஹிந்திராதான் என்று கூறும் அளவிற்கு கார்களை தயாரித்து வருகிறது.
அறிமுகமான Mahindra XUV 7XO:
அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனம் தனது Mahindra XUV 7XO காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் வசதிகள் கொண்ட இந்த காரின் வருகைக்காக கார் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த கார் உட்கட்டமைப்பு வசதிக்காகவும், தோற்றத்திற்காகவும் வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
விலை என்ன?
இந்திய சந்தையில் இந்த காரின் தொடக்க விலை விலை ரூபாய் 13.66 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இந்த விலை இந்த காருக்கான முதல் 40 ஆயிரம் முன்பதிவிற்கு மட்டுமே ஆகும். அதன்பின்பு இந்த விலையில் மாற்றம் இருக்கும். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே இணைதளம் மூலமாகவும், டீலர்ஷிப் மூலமாகவும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
13 வேரியண்ட்கள்:
இந்த காரின் உட்கட்டமைப்பு வசதி மிகவும் வசீகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. 3 திரை கொண்ட டேஷ்போர்ட் இந்த காரில் உள்ளது. தகவல்கள் நிரம்பிய தொடுதிரை நடுவில் உள்ளது. முன்பக்கம் அமர்ந்து பயணிக்கும் பயணிக்காக மூன்றாவதாக ஒரு திரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் 13 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக சந்தையில் அறிமுகமாகியுள்ளது. அதாவது, 2200 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜின் மற்றும் 2000 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்ட காராக அறிமுகமாகியுள்ளது.
540 டிகிரி கேமரா:
XUV 700 காருக்கு மாற்றாக சந்தையில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள XUV 7XO கார் அதன் வடிவம், உட்புறத் தோற்றம், வெளிப்புறத் தோற்றம், மைலேஜ், தரம் ஆகியவற்றால் மாறுபட்டதாக உள்ளது. இந்த காரில் பனோரமிக் மேற்கூரை, வயர்லஸ் போன் சார்ஜர்ல, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதிகள் உ்ளளது. 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் வசதி உள்ளது.
இந்த காரின் மிகவும் சிறப்பு வாய்ந்த சிறப்பம்சமாக 540 டிகிரி கேமரா கருதப்படுகிறது. இந்த மல்டிபிள் கேமரா இந்த காரின் தனித்துவம் ஆகும். இந்தியாவிலே 540 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட முதல் கார் இதுவே ஆகும். லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் வசதி உள்ளது.
6 கியர்கள் கொண்ட காராக இந்த கார் மேனுவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வெர்சனும் உள்ளது. 2026ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த கார் மிகப்பெரிய ஏற்றத்தை தரும் என்றே கருதப்படுகிறது.



















