Mahindra XUV 7XO: 7 சீட்டர்களின் பாஸ்..! XUV 7X0 அப்க்ரேட்களும், புது அம்சங்களும் - 27 ட்ரிம்கள், முழு விலைப்பட்டியல்
Mahindra XUV 7XO Price List: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஹிந்த்ரா XUV 7XO காரின், 27 ட்ரிம்களுக்கான முழு விலை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Mahindra XUV 7XO: மஹிந்த்ராவின் புதிய XUV 7XO காரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் வசதிகல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ராவின் XUV 7XO அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்த்ராவின், 7 சீட்டரான XUV 7XO அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் XUV 700 மாடலின் புதிய அவதாரமான இந்த காரானது, டிசைன் அடிப்படையில் மிகப்பெரிய அப்க்ரேட்களையும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தல்களையும் பெற்றுள்ளது. அதேநேரம், இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யப்படலாம், பழைய ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் இந்த மாடலுக்கான தொடக்க விலை ரூ.13.66 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் XUV 7XO காரானது, டாடா சஃபாரி, எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் ஹுண்டாய் அல்கசார் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. ஏற்கனவே தொடங்கப்பட்ட முன்பதிவுகள் வெளியீட்டை ஒட்டி நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த பேட்சுக்கான முன்பதிவு வரும் ஜனவரி 14ம் தேதி தொடங்க உள்ளது. அதேநாளில், குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கான விநியோகமும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் XUV 7XO - முழு விலைப்பட்டியல்:
மஹிந்த்ராவின் புதிய XUV 7XO காரானது இருக்கை அமைப்புகள், எரிபொருள் ஆப்ஷன்கள், ட்ரைவ் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 27 ட்ரிம்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றின் விலை ரூ.13.66 லட்சத்தில் தொடங்கி ரூ.24.92 லட்சம் வரை நீள்கிறது. முழுமையான விலைபட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
The buzz isn't accidental. The Mahindra XUV 7XO takes the stage. pic.twitter.com/bnec9CHiCL
— Mahindra XUV 7XO (@Mahindra_XUV7XO) January 5, 2026
மஹிந்த்ராவின் XUV 7XO - கவனத்தை ஈர்க்கும் டிசைன்
XUV 7XO காரின் முன்புறமானது முற்றிலுமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரிய மற்றும் புதியதயாக வடிவமைக்கப்பட்ட க்ரில்லானது 8 வெர்டிகல் ஸ்லாட்டுகளை கொண்டுள்ளது. இண்டெக்ரேடட் ஸ்கிட் ப்ளேட்டை கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடிக்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள், இன்டிகேட்டர் விளக்குகள் மற்றும் புதிய ஃபாக் லேம்ப் தொகுப்பு ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன. காரின் பக்கவாட்டு தோற்றமானது பெரும்பாலும் XUV700 போலவே காட்சியளிக்கிறது. புதியதாக வடிவமைக்கப்பட்ட 19 இன்ச் அலாய் வீல்கள் தனித்துவமாக தெரிகிறது. பின்புறத்தில் கருநிற அப்லிக்குடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனெக்டட் எல்இடி டெயில்லேம்பை கொண்டுள்ளது.
மஹிந்த்ராவின் XUV 7XO - மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்
மஹிந்த்ராவின் XUV 7XO காரின் உட்புற அம்சங்களின் மேம்பாடு என்பது பெரும்பாலும் XEV 9e மற்றும் 9S மாடல்களின் தாக்கத்தை கொண்டுள்ளது. மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாக 3 ஸ்க்ரீன் செட்-அப்கள், 12.3 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் முன்புற இருக்கை பயணிக்கு 12.3 இன்ச் எண்டர்டெயின்மெண்ட் ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக இந்த எஸ்யுவியில் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஃப்ளாட் பாட்டம், மவுண்டட் கண்ட்ரோல்ஸ் உடன் கூடிய லெதர் வ்ராப்ட் ஸ்டியரிங் வீல், அப்க்ரேடட் ADRENOX+ சிஸ்டம், டால்பி அட்மாஸ் உடன் கூடிய 16 ஸ்பீக்கர் ஹர்மன் கர்டோன் ஆடியோ சிஸ்டம் மற்றும் BYOD ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய அம்சங்களில் 540 டிகிரி சரவுண்டட் வியூ கேமரா, டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேடட் சீட்ஸ், ஃப்ரண்ட் சீட்டில் பவர்ட் பாஸ் மோட், ஆட்டோ டிம்மிங் IRVM, பவர்ட் முன்புற இருக்கைகள் கூடுதலாக ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி ஃபங்க்சன், கூல்ட் க்ளோவ் பாக்ஸ், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், இரண்டாவது இருக்கை பயணிகளுக்கு வயர்லெஸ் சார்ஜ் வசதி, ஒருங்கிணைக்கப்பட்ட விண்டோ ப்ளைட்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மஹிந்த்ராவின் XUV 7XO - இன்ஜின் ஆப்ஷன்கள்
இன்ஜின் அடிப்படையில் XUV 7XO மாடலில் எந்த மாற்றமுல் இல்லாமல் XUV700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் இருந்த ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. இந்த SUV 2.2L mHawk டீசல் மற்றும் 2.0L டர்போ பெட்ரோல் இன்ஜின்களை கொண்டுள்ளது. இவை முறையே 450Nm & 182bhp, 380Nm & 200bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டாப் வேரியண்ட்கள் AWD (ஆல்-வீல் டிரைவ்) அமைப்புடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன. இந்த SUVயில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.





















