Thar 5 Door Features: சோதனை ஓட்டத்தில் ஒரு க்ளிக்! வெளியான தார் 5 டோர் கார் புகைப்படம் - அம்சங்கள் இவ்வளவா?
Mahindra Thar 5 Door Features: மஹிந்திரா நிறுவனத்தின் தார் 5 டோர் எடிஷன் காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட, புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Mahindra Thar 5 door: மஹிந்திரா நிறுவனத்தின் தார் 5 டோர் எடிஷன் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட, புகைப்படங்கள் மூலம், காரில் உள்ள பல அம்சங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா 5 டோர் தார் எடிஷன்:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மஹிந்திரா தார் 5-டோர் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு சூட்டுவதற்காக அர்மாடா உள்ளிட்ட 7 பெயர்களை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி இரண்டு கூடுதல் கதவுகளுடன் கூடிய ஸ்டேண்டர்ட் தார் வாகனமாக மட்டுமின்றி, பல புதிய அப்டேட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், புதிய 5 டோர் எடிஷன் தார் மாடல் காரின், சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த காரில் இடம்பெறக் கூடிய பல அம்சங்கள் தற்போது உறுதியாகியுள்ளது.
Mahindra Thar 5-door: exterior highlights:
சோதனை ஓட்டத்தின் போது சிக்கிய புகைப்படங்களின்படி, தார் 5-டோர் எடிஷனின் வெளிப்புறத்தில்,ஒரு புதிய கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்புடன், மேம்படுத்தப்பட்ட மூடுபனி விளக்குகள் கிடைக்கும். டாப் வேரியண்ட்களில் ஹெட்லேம்ப்கள், முன் ஃபெண்டர்களில் பக்கவாட்டு இண்டிகேட்டர்கள் மற்றும் மூடுபனி விளக்குகள் உட்பட அனைத்தும் எல்இடி விளக்குகளாக கிடைக்கும். தார் 3-டோர்லிருந்து வித்தியசமாக, 5 டோரில் டெயில்-லேம்ப்களும் எல்இடி விளக்குகளாக இருக்கும். தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகள் மற்றும் பின்புறத்தில் கண்ணாடியின் வடிவமானது தார் EV கான்செப்ட்டை போன்று உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சக்கரங்கள் மற்றும் டயர்களை தேர்வு செய்வதிலும் பல ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாப் வேர்யண்ட்களில் 19-இன்ச் டயமண்ட்-கட் அலாய்கள் கிடைக்கும். சில மிட்-ஸ்பெக் வகைகளில் எளிமையான தோற்றமுடைய அலாய் வீல்களை தேர்வு செய்ய முடியும். எண்ட்ரி லெவல் டிரிம்களுக்கு எஃகு சக்கரங்கள் கிடைக்கும். மேலும், தார் 5-டோர் பின்புற வைப்பர் அமைப்பு மற்றும் ரிமோட் ஃப்யூல்-ஃபில்லிங் கேப் ஓப்பனிங் ஆப்ஷனையும் கொண்டிருக்கும். - இவை இரண்டும் தார் 3-டோர் எடிஷனில் இல்லாத நிலையிஒ, தார் மாடலுக்கான அம்சங்களில் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
Mahindra is in its final phase of testing the upcoming 5-door Thar. The latest spotting of a production-ready test car reveals some major changes up close.
— 91Wheels.com (@91wheels) January 31, 2024
It is expected to come with-
✅ New dual-tone set of 19-inch alloy wheels with 255/60 tyres
✅ LED headlights and LED fog… pic.twitter.com/P3bH9wGCVo
Mahindra Thar 5-door: Interior highlights:
தார்-3 டோர் எடிஷனுடன் ஒப்பிடும்போது புதிய 5 டோர் எடிஷனில் சில வேறுபாடுகள் மற்றும் துணை நிரல்கள் உள்ளன. முதலாவதாக, வேரியண்ட்களை பொறுத்து சிங்கிள் டோன் மற்றும் டியூயல்-டோன் விருப்பங்களைக் கொண்டிருக்கும். புதிய தார் 5-டோர் டேஷ்போர்டு வடிவமைப்பு, குறிப்பாக சென்டர் கன்சோலுக்கு, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு இடமளிக்கும் வகையில் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தார் 5-டோர் ஒவ்வொன்றும் 10.25-இன்ச் அளவுள்ள இரண்டு முழு டிஜிட்டல் திரைகளைப் பெறுகிறது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று கருவிப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் திரையானது வரவிருக்கும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ளதைப் போன்றே இருக்கிறது , அதே நேரத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் நாம் ஏற்கனவே XUV700-இல் பார்த்தது போல் தெரிகிறது . தார் 5-டோரில் உள்ள கூடுதல் அம்சங்களாக புஷ் பட்டன் ஸ்டார்ட், முன் மற்றும் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள், லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, ஒரு சன்ரூஃப் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை உள்ளன. தார் 5 டோர் எடிஷன் 3-டோர் தார் போன்ற 5 இருக்கை மாடலாக தொடர்கிறது. தார் 5-டோர் மூன்றாவது வரிசை இருக்கைகளைப் பெறுவது பற்றிய செய்தி எதுவும் இல்லை.
Mahindra Thar 5-door: safety features:
தார் 3-டோர் எடிஷனில் இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகள் உள்ளன. ஆனால், மஹிந்திரா தார் 5-டோர் எடிஷன் ஆனது ஆறு ஏர்பேக்குகளுடன் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. முன்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டேஷ்கேம் ஆகியவற்றைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ADAS அல்லது 360-டிகிரி கேமரா அமைப்பு பற்றிய தகவல் எதுவும் இல்லை.
Mahindra Thar 5-door: suspension, powertrains:
தார் 5-டோர் ஸ்கார்பியோ N- ல் இருந்ததை போன்ற ஏணி சட்டகம் மாதிரியான சேஸ்ஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தார் 5 டோரின் வீல்பேஸ் ஸ்கார்பியோ N இன் வீல்பேஸ் போலவே இருக்கும். சஸ்பென்ஷன் செட்டப்பும் அதே போல் உள்ளது. தார் 5-டோரிலும் அதிர்வெண் சார்ந்த டேம்பர்களைப் பெறலாம். ஸ்கார்பியோ N மாடலில் இருக்கும் ஒரே மாதிரியான ஆற்றல் வெளிப்பாடை கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தார் 5-டோர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், மஹிந்திரா தார் 5-டோரில் 4WD மற்றும் 2WD விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
Mahindra Thar 5-door: launch timeline, expected pricing:
தார் 5 டோர் வெளியீடு என்பது 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறும் என்றும், பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட XUV300 க்குப் பிறகு மஹிந்திராவின் அடுத்த பெரிய வெளியீடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தார் 5-டோரின் ஆரம்ப விலை ரூ. 15 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.