Jeep Meridian | இந்தியாவில் ஜீப் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி விரைவில் அறிமுகம்: சிறப்பு அம்சம் என்ன?
இந்தியாவில் ஜீப் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி வரும் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் எஸ்யூவி கார் விற்பனையில் மிகவும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று ஜீப் இந்தியா நிறுவனம். இந்த நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு புதிது புதிதாக கார்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அந்த நிறுவனத்தின் அடுத்த புதிய எஸ்யூவி காரான மெரிடியன் இந்தாண்டின் பிற்பாதியில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்தப் புதிய காரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? அதன் விலை என்ன? என்பதை பார்ப்போம்.
ஜீப் இந்தியா மெரிடியன் எஸ்யூவி கார் 7 பேர் அமரக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள ஜீப் காம்பஸ் காரைவிட சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. காம்பஸ் காரில் அமைந்துள்ள எஞ்சின் உடன் இதில் 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட டீசல் எஞ்சின் கூடுதலாக அமைந்துள்ளது. இது காருக்கு அதிக பவர் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் அமைந்துள்ளது.
இந்த காரில் மூன்று அடுக்குகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 7 பேர் அமர்ந்து சொகுசாக பயணம் செய்ய இந்தக் கார் வசதியாக இருக்கும் என்று தெரிகிறது. இவை தவிர இந்த காரில் ஹெட் லைட் மற்றும் முன்பக்க பம்பர் ஆகியவையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் காரில் 10.1 இன்ச் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் டிஜிட்டல் கருவிகள், பனோரோமிக் சன் ரூஃப் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காரின் விலை 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெரிடியன் கார் டயோட்டோ நிறுவனத்தின் ஃபார்ச்சுனர் மற்றும் எம்ஜி கிளாஸ்டர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. ஜீப் நிறுவனத்தின் இந்தப் புதிய கார் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கார் வெளியாகும் போது இதன் விலை சரியாக தெரியும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? - வெற்றிமாறன் வாங்கியிருக்கும் BMW R NineT Scrambler -இன் சிறப்பு தெரியுமா?