பிப்ரவரி 2026ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சுமார் 4.6 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஜனவரி மாத விற்பனையை விட அதிகமாகும்.
Car Sale Feb 2026: கொம்பனாக ஒசந்து நிக்கும் மாருதி .. ஷாக் அடிக்கும் டாடா.. விற்பனையில் மிரட்டிய கார் மாடல்கள்
Car Sale Feb 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையில் அசத்திய கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Sale Feb 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையில், டாடா ப்ராண்ட் முன்னிலை வகிக்கிறது.
பிப்ரவரி மாத கார் விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 4.6 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஜனவரி மாதத்தில் விற்பனையானதை காட்டிலும் அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்விற்பனையான 3.81 லட்சத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகமாகும். இந்நிலையில் நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக அதிகளவில் விற்பனையான கார் மாடல்கள், விற்பனையில் அசத்திய எஸ்யுவிக்கள் மற்றும் மின்சார கார் மாடல்கள் குறித்த முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
விற்பனையில் அசத்திய கார் ப்ராண்ட்கள்:
| ப்ராண்ட்கள் | பிப்ரவரி மாத விற்பனை |
| மாருதி சுசூகி | 2 லட்சத்து 13 ஆயிரத்து 995 யூனிட்கள் |
| ஹுண்டாய் | 66 ஆயிரத்து 134 யூனிட்கள் |
| டாடா | 63 ஆயிரத்து 331 யூனிட்கள் |
| மஹிந்த்ரா | 60 ஆயிரத்து 18 யூனிட்கள் |
| டொயோட்டா | 34 ஆயிரத்து 34 யூனிட்கள் |
| கியா | 27 ஆயிரத்து 610 யூனிட்கள் |
விற்பனையில் மிரட்டிய டாப் 10 மாடல்கள்:
ஒட்டுமொத்தமாக விற்பனையில் அசத்திய முதல் 10 மாடல்களில், மாருதி சுசூகியின் 6 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.அதிகம் விற்பனையான மாடல்களில் 5 எஸ்யுவிக்கள் இடம்பெற்றுள்ளன.
| கார் மாடல் | பிப்ரவரி மாத விற்பனை |
| டாடா நெக்ஸான் | 19,430 யூனிட்கள் |
| மாருதி சுசூகி டிசையர் | 19326 யூனிட்கள் |
| டாடா பஞ்ச் | 18,748 யூனிட்கள் |
| ஹுண்டாய் க்ரேட்டா | 17,938 யூனிட்கள் |
| மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா | 17,863 யூனிட்கள் |
| மாருதி சுசூகி எர்டிகா | 17,807 யூனிட்கள் |
| மாருதி சுசூகி வேகன்ஆர் | 14,885 யூனிட்கள் |
| மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 14,883 யூனிட்கள் |
| மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ (க்ளாசிக் + N) | 14,665 யூனிட்கள் |
| மாருதி சுசூகி பலேனோ | 14,632 யூனிட்கள் |
விற்பனையில் அசத்திய டாப் 10 எஸ்யுவிக்கள்:
ஒட்டுமொத்த எஸ்யுவி விற்பனையிலும் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை மாருதி சுசூகி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.
| கார் மாடல் | பிப்ரவரி மாத விற்பனை |
| டாடா நெக்ஸான் | 19,430 யூனிட்கள் |
| டாடா பஞ்ச் | 18,748 யூனிட்கள் |
| ஹுண்டாய் க்ரேட்டா | 17,938 யூனிட்கள் |
| மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா | 17,863 யூனிட்கள் |
| மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ (க்ளாசிக் + N) | 14,665 யூனிட்கள் |
| மாருதி சுசூகி விக்டோரிஸ் | 14,000+ யூனிட்கள் |
| மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் | 12,500+ யூனிட்கள் |
| ஹுண்டாய் வென்யு | 11,500+ யூனிட்கள் |
| மஹிந்த்ரா பொலேரோ | 11,000+ யூனிட்கள் |
| கியா சோனெட் | 10,500+ யூனிட்கள் |
மின்சார கார்களின் விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் பிரிவானது டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்த்ரா ஆகிய 3 நிறுவனங்களால் அதிகளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த மாத விற்பனை விவரங்களும் அதனையே காட்டுகின்றன.
| கார் ப்ராண்ட் | பிப்ரவரி மாத விற்பனை |
| டாடா மோட்டார்ஸ் | 8,385 யூனிட்கள் |
| எம்ஜி மோட்டார் | 4,312 யூனிட்கள் |
| மஹிந்த்ரா | 2,665 யூனிட்கள் |
| வின்பாஸ்ட் | 374 யூனிட்கள் |
| BYD இந்தியா | 274 யூனிட்கள் |
டாப் 5 மின்சார கார்கள்:
| கார் மாடல் | பிப்ரவரி மாத விற்பனை | அதிகம் விற்பனையான மாடல் |
| டாடா மோட்டார்ஸ் | 8,385 யூனிட்கள் | நெக்ஸான் |
| எம்ஜி மோட்டார் | 4,312 யூனிட்கள் | விண்ட்சர் |
| மஹிந்த்ரா | 2,665 யூனிட்கள் | XUV 3XO |
| வின்பாஸ்ட் | 374 யூனிட்கள் | VF7 |
| BYD இந்தியா | 274 யூனிட்கள் | Atto 3 |
Frequently Asked Questions
பிப்ரவரி 2026ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மொத்தம் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன?
பிப்ரவரி 2026ல் கார் விற்பனையில் முன்னிலை வகித்த கார் பிராண்ட் எது?
பிப்ரவரி 2026ல் கார் விற்பனையில் டாடா பிராண்ட் முன்னிலை வகிக்கிறது. டாடா நெக்ஸான் அதிகம் விற்பனையான கார் மாடலாகவும், டாடா பஞ்ச் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பிப்ரவரி 2026ல் அதிகம் விற்பனையான முதல் 10 கார் மாடல்களில் எத்தனை மாருதி சுசுகி கார்கள் இடம்பெற்றன?
பிப்ரவரி 2026ல் அதிகம் விற்பனையான முதல் 10 கார் மாடல்களில் மாருதி சுசுகியின் 6 கார்கள் இடம்பெற்றன. இதில் டாடா நெக்ஸான் முதலிடத்திலும், மாருதி சுசூகி டிசையர் இரண்டாமிடத்திலும் உள்ளது.
பிப்ரவரி 2026ல் மின்சார கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸின் பங்கு என்ன?
பிப்ரவரி 2026ல் மின்சார கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 8,385 யூனிட்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. இது ஒட்டுமொத்த மின்சார வாகன சந்தையில் கணிசமான பங்களிப்பாகும்.

























