மேலும் அறிய

Vetrimaaran New Bike | டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? - வெற்றிமாறன் வாங்கியிருக்கும் BMW R NineT Scrambler -இன் சிறப்பு தெரியுமா?

Vetrimaaran New Specifications: 1170 CC BS6 ஏர் கூல் இன்ஜினை உள்ளடக்கிய BMW R NineT Scrambler பைக்கானது சென்னையில் (ஆன் ரோடு விலை 13-02-2022 தேதியின் படி ) 18,65,743 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படும் வெற்றிமாறன் BMW R nineT Scrambler என்ற புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

விலை எவ்வளவு? 

1170 சிசி BS6 ஏர் கூல் இன்ஜினை உள்ளடக்கிய BMW R NineT Scrambler பைக்கானது சென்னையில் (ஆன் ரோடு விலை 13-02-2022 தேதியின் படி ) 18,65,743 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன், பின் என இருபக்கமும் அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ள இந்த பைக் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை உள்ளடக்கியது.

3.5 செகண்டில் 100 கிலோமீட்டர் வேகம் 

223 கிலோ எடை கொண்ட இந்த பைக்கிற்கு 3 வருட  வாரண்டி கொடுக்கப்படுகிறது. 3.5 செகண்டில் 100 கிமீட்டரை எட்டும் இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். 12 V / 12 Ah அளவு திறன் கொண்ட பேட்டரியை உள்ளடக்கிய இந்த பைக்கில் BMW Motorrad ABS Pro ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by KUN BMW Motorrad (@kunbmwmotorrad)

இதில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் 7,250rpm -ல் 107.2bhp பவரையும், 6,000rpm யில் 116Nm டார்க்கையும் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு வேரியண்டில் மட்டும் கிடைக்கும் இந்த பைக், 4 நிறங்களில் கிடைக்கிறது. 

Yamaha Rx 100 பைக்

ஏற்கனவே வெற்றிமாறனிடம் கருப்பு கலர்  BMW மற்றும் Yamaha Rx 100 பைக் இருக்கிறது. இந்த Yamaha Rx 100  பைக்கானது, அவரது மனைவி ஆர்த்தி காதலித்துக் கொண்டிருந்த போது அவருக்கு வாங்கிக்கொடுத்தது. தற்போது புதுவரவாக இந்த பைக்கை வெற்றிமாறன் வாங்கியிருக்கிறார். 

தான் அறிமுகமான பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை வைத்து கதை களத்தை அமைத்திருப்பார் வெற்றிமாறன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கினார்.

இரண்டு தேசிய விருதுகள் 

இந்தப்படத்திற்காக சிறந்த இயக்குநர், மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  ‘விசாரணை’  ‘ வட சென்னை’, ‘ ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் அசுரன் படத்திற்காக மீண்டும் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தற்போது வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து  ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கும் வெற்றிமாறன் அமீர் இயக்க இருக்கும் புதிய படத்திற்கான கதையை தங்கவேலவனுடன் இணைந்து எழுதியிருக்கிறார்.  

Also Read | IPL 2022 Auction CSK: நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Embed widget