Grand i10 Nios Offer: இன்னும் 10 நாள்தான் இருக்கு.. ரூ.89 ஆயிரம் தள்ளுபடி.. Grand i10 Nios கார் வாங்கலாமா?
Grand i10 Nios Offer: ஹுண்டாய் நிறுவனத்தின் Grand i10 Nios காருக்கான ஜனவரி மாத தள்ளுபடி இன்னும் 10 நாட்களில் நிறைவடைய உள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஹுண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதந்தோறும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
10 நாளில் முடிகிறது தள்ளுபடி:
ஹுண்டாய் நிறுவனம் இந்த ஜனவரி மாதமும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் Hyundai Grand i10 Nios காருக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது. ஹுண்டாய் நிறுவனம் தனது Hyundai Grand i10 Nios காருக்கு ரூபாய் 89 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளது. இந்த தள்ளுபடி முடிய இன்னும் 10 நாட்கள் வரை உள்ளது.
விலை என்ன?
ஹேட்ச்பேக் ரக காராக இருந்தாலும் பயணிகள் கால் நீட்டி அமர்வதற்கு மிகவும் வசதியான காராக இந்த கார் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.69 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 9.41 லட்சம் ஆகும். தற்போது இந்த காருக்கு 89 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளதால் இதன் தொடக்க விலை ரூபாய் 5.80 லட்சமாக அமைந்துள்ளது. இதன் டாப் வேரியண்டை ரூபாய் 8.50 லட்சத்திற்கும் கீழே வாங்க இயலும்.
இந்த காரில் மொத்தம் 15 வேரியண்ட்கள் உள்ளது. கடப்பா எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவலிலும், ஆட்டோமெட்டிக்கிலும் இந்த கார் உள்ளது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 82 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது.
செளகரியமான கார்:
இந்த கார் நெருக்கடியான சாலைகளிலும் ஓட்டுவதற்கு மிகவும் இலகுவானதாக உள்ளது. இந்த காரின் வெளித்தோற்றம் வசீகரமாக உள்ள நிலையில், உட்புறமும் மிகவும் வசதியானதாகவும், கவரும் வகையிலும் உள்ளது. 113.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் மிகவும் எளிதாக செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த கார் 18 முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இந்த காரில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி உள்ளது. டைப் சி சார்ஜிங் வசதி உள்ளது.
பாதுகாப்பு வசதிகள்:
15 இன்ச் டைமண்ட் கல் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு, சாம்பல், பச்சை, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த கார் உள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. டாடாவின் டியாகோ, மாருதி சுவிஃப்ட், பலேனா ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.





















