Alcazar Facelift Top Features: ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் Alcazar - சிறப்புகள் என்ன?
Hyundai Alcazar 2024 Facelift Top Features: ஹூண்டாய் Alcazar கார் மாடல் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
பிரபல நிறுவனமான ஹுண்டாய் மோட்டர் புதிய கார் மாடலான Alcazar வரும் 9-ம் தேதி (செப்டம்பர்,9) அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கார் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.
கார் வாங்க வேண்டும் என்ற திட்டம் இருப்பவர்களுக்காக சிறப்பான தயாரிப்புடன் வெளிவர இருக்கிறது. சிறந்த வசதி, பாதுகாப்பு, டிஜிட்டல் மாடல் உள்ளிட்ட பல புதிய வசதிகளை Alcazar மாடல் கார் கொண்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம், கனெக்டிவிட்டி வசதிகளுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.வி. ரக கார்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. Alcazar கார் பெட்ரோல், டீசல் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. 6 இருக்கைகள், 7 இருக்கைகளுடன் ஆட்டோமேடிக் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. 6 இருக்கைகள் கொண்ட கார் மாடல் அதிக வசதிகளுடன் இருக்கும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்களை காணலாம்.
டிஜிட்டல் Key:
சொகுசு கார்களில் இருப்பதை போலவே Alcazar கார் மாடலில் NFC மற்றும் டிஜிட்டல் கீ கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கார்களில் NFC மற்றும் டிஜிட்டல் கீ வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள முதல் கார் மாடல் இதுதான். ஸ்மாட் வாட்ச் இருந்தால் அதன் மூலம் கார் கதவுகள், காரை அன்லாக் செய்வது உள்ளிட்டவற்றை செய்துவிடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சாவியை மூன்று பேர் பயன்படுத்தலாம். அதோடு, 7 டிஜிட்டல் டிவைஸ்களில் ஒரே நேரத்தில் லிங்க் செய்து கொள்ள முடியும்.
இருக்கைகள்:
காரில் ஓட்டுநர் இருக்கைகளைப் போலவே அடுத்த வரிசையில் உள்ள சீட்களுன் armrests -உடன் வருகிறது. முன்னாள் இருக்கும் இருக்கைகளை பின் இருக்கைகள் மூலம் அட்ஜெட் செய்யும் வசதியும் உண்டு. சிறிய அளவிலான டேபிள், கப், வாட்டர் பாட்டில் வைக்கும் இடம், ஒயர்லஸ் சார்ஜிங் போர்ட் எல்லாமே இருக்கிறது.
ஓட்டுநர் இருக்கை 360 டிகிரி கேமரா, வாய்ஸ் மூலம் பனரோமிக் சன்ரூஃப், ADAS மற்றும் டியூல் வானிலை மாற்றும் கன்ரோல், டச் டைப் ஏ.சி. கன்ட்ரோல் பேனல், 10.25-inch HD ஸ்க்ரீன், 8 ஸ்பீக்கர், BOSE ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதன் விலை உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும்.