Hyundai : இரண்டு வேரியண்ட்களில் வரும் ஹூண்டாய் வென்யூ N Line.. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் புதிய வெர்ஷனான வென்யூ என் லைன் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் புதிய வெர்ஷனான வென்யூ என் லைன் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
வரவேற்பைப் பெற்ற வென்யூ:
இந்திய கார் சந்தையில் நடுத்தர பட்ஜெட்டில் எஸ்யூவி கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக போட்டிபோட்டுக்கொண்டு கார்களை அறிமுகம் செய்கின்றன கார் நிறுவனங்கள். டாடா நெக்ஸான், சுசுகி ப்ரிஸா, கியா சோனட், மேகேந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக கடந்த 2019ம் ஆண்டு வென்யூவை களமிறக்கியது ஹூண்டாய் நிறுவனம். இந்த காரும் நல்ல வரவேற்பைப் பெறவே, அதன் டிசைனில் சிறு சிறு மாற்றங்களை செய்து புதிய கார்களை வெளியிட்டது. இதனையடுத்து வென்யூ என் லைன் என்ற காரை ஹூண்டாய் கடந்த மார்ச் மாதம் முதல் சோதித்து வந்தது. இந்த கார் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது சிங்கிள் எஞ்சின் கியர்பாக்ஸ் காம்பினேஷனில், இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
என் லைன் எஞ்சின்:
ஹூண்டாய் ஐ20 என் லைனைப்போலவே வென்யூ என் லைனும் என்6 மற்றும் என்8 என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகிறது. இரண்டு கார்களும் 120 ஹெச்பி, 1 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினில் வெளியாகிறது. ஐ20 என் லைன் போல் அல்லாமல் ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் 7 ஸ்பீட்கள் கொண்ட டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஸனுடன் வருகிறது.
டிசைன் அப்டேட்:
வென்யூவின் ஸ்டாண்டர்ட் மாடல் போல் அல்லாமல் அதன் டிசைனில் சிறுசிறு அப்டேட்களை செய்துள்ளது. காரின் முன்பக்கம், முன் மற்றும் பின் பக்க பம்பர்களின் அடிப்பகுதியில் மாற்றம், சிவப்பு நிற ரூஃப் டெய்ல்ஸ், புதிய அல்லாய் வீல் உள்ளிட்ட புதிய அப்டேட்களுடன் இது வெளியாகும் என்று கூறப்படுகிறது. இண்டீரியரைப் பொறுத்தவரை, என் லைனில் உள்ள அதே மாடல் தான் பின்பற்றப்படும் என்றாலும், முழுவதும் கருப்பு நிறத்தாலான இண்டீரியரையும், என் என்ற லோகோவை பதித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
வசதிகளைப் பொறுத்தவரை என் லைன் என் 8 மாடல் வென்யூவிம் டாப் மாடலாக இருக்கும். இதில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆகியவை கொண்ட 8 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, கார் டெக், ஆம்பியண்ட் லைட்டிங், பவர்ட் ட்ரைவர் சீட் மற்றும் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். என் லைன் என்6 மாடலைப் பொறுத்தவரை ஹாலோஜன் முகப்பு விளக்குகள் இருக்கும் என்றும், வாய்ஸ் கமாண்ட், ஆம்பியண்ட் லைட் மற்றும் ஏர் ப்யூரிபயர்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை ஐ20 என்லைனைப் போலவே என்8ல் 6 ஏர்பேக்குகளையும், என்6-ல் இரண்டு ஏர்பேக்குகளையும் கொண்டிருக்கும். இந்த கார்களின் விலை 7 லட்சம் முதல் 11 லட்சம் வரை இருக்கலாம் என்றும், இம்மாதத்தின் இறுதியில் இந்த கார்கள் விற்பனைக்கு வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.