மேலும் அறிய

Car Price Hike: இனிமே கார் வாங்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... ஹோண்டாவும் விலையை உயர்த்தி அறிவிப்பு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களை தொடர்ந்து, ஹோண்டா நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

விலையை உயர்த்திய உற்பத்தி நிறுவனங்கள்:

நடப்பாண்டில் சர்வதேச அளவில் நீடித்த செமிகண்டக்டர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் போன்ற காரணங்களால், இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து பல்வேறு தகவல் வெளியாகின. அந்த வகையில், உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றுடன், ஆடி, ரெனால்ட் , எம்ஜி மோட்டார் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார் நிறுவனங்கள்,  அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்யும் வகையில், தங்களது பல்வேறு கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

புதிய விலை விவரங்கள்:

அதன்படி ஜீப் இந்தியா நிறுவனம் தனது அனைத்து ஜீப் எஸ்யூவி வகைகளின் விலையையும்  2 முதல் 4% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ICE மற்றும் EV மாடல் கார்களின் விலை தற்போதைய விலையிலிருந்து இரண்டு சதவீதம் வரை விலை உயர்வைக் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கியா இந்தியா நிறுவனம் தனது ஆட்டோமொபைல்களின் விலை ரூ.50,000 வரை உயர்த்தப்படும் எனவும், புதிய விலை உயர்வு வரும் ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான Mercedes-Benz தனது கார் மாடல்களின் விலையை 5% அளவிற்கும், 
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவியின் விலையை ரூ.90,000 வரையும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளன. இதேபோன்று, ஆடி இந்தியா நிறுவனமும் வரும் ஜனவரி 2023 முதல்,  கார் விலையை 1.7% வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்திய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய விலை அழுத்தம் ஆகியவை விலையை உயர்த்தும் சூழலுக்கு தள்ளுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருந்தாலும், விலைஒ உயர்வு எவ்வளவு என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

விலையை உயர்த்தும் ஹோண்டா நிறுவனம்:

இந்த நிறுவனங்களின் வரிசையில், ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம் தனது சில கார் மாடல்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,  மூலப்பொருட்களின் உள்ளீட்டு விலை மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ள கடுமையான உமிழ்வு தரநிலைகளை கடைபிடிக்கும் வகையில், செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலையை  உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.30,000 வரையிலான விலை உயர்வு என்பது, கார் மாடலுக்கு ஏற்றவாறு மாறுபடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கான முக்கிய காரணம்:

நிகழ்நேர ஓட்டுநர் உமிழ்வு அளவைக் கண்காணிக்க வாகனங்களில் சுய-கண்டறியும் சாதனம் இருக்க வேண்டும் என்பது, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் வாகன விலை உயர்வுக்கும், இந்த சாதனத்தை பொருத்துவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget