Honda NX500: ஹோண்டாவின் புதிய NX500 மாடலுக்கான முன்பதிவு தொடங்கியது - மொத்த அம்சங்களின் பட்டியல் இதோ..!
Honda NX500: ஹோண்டா நிறுவனத்தின் புதிய Honda NX500 மாடல் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு, இந்திய சந்தையில் தொடங்கியுள்ளது.
Honda NX500: ஹோண்டா நிறுவனத்தின் புதிய Honda NX500 மாடல் மோட்டார்சைக்கிளை, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தொடங்கியது முன்பதிவு:
புதிய ஹோண்டா NX500 அட்வென்ச்சர் டூரர் மாடலுக்கான முன்பதிவு நடைமுறை இந்தியாவில் தொடங்கியுள்ளன. எதிர்கால அம்சங்களை கொண்ட மோட்டார்சைக்கிளில் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஹோண்டா பிக் விங் டீலர்ஷிப்களில் ரூ.10,000 செலுத்தி NX500 மாடல் பைக்கை முன்பதிவு செய்யலாம் . இது அந்நிறுவனத்தின் மிட்-கெபாசிட்டி ADV ஆகும். NX500 மாடல் அதன் விலை நிர்ணயத்தின் அடிப்படையில் சமீபத்தில் அறிமுகமான XL750 Transalp க்கு கீழே இருக்கும். ஹோண்டா NX500 இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது, CB500X மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. CB போலல்லாமல், NX500 மிகவும் நோக்கமுள்ள சாகச சுற்றுலா பைக் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு விவரங்கள்:
ரேலி-பைக் ஸ்டைல் ஃபேரிங், உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் இருக்கை நிலை ஆகியவை, இது சிறந்த அட்வென்சர் பைக்காக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. NX500 இன் இருக்கை உயரம் 830 மிமீ ஆக இருப்பது, இதனை பலருக்கும் அணுகக்கூடியதாக ஏற்படுத்தியுள்ளது. பாடிவொர்க்கின் கீழ் ஒரு டைமண்ட் ஃபிரேம் இருக்கும் அதேவேளையில், சஸ்பென்ஷன் அமைப்பில் ஒரு USD ஃபோர்க் மற்றும் ஒரு மோனோஷாக் உள்ளது. பைக் முன்புறத்தில் 19 அங்குல மற்றும் பின்புறத்தில் 17 அங்குல பிளாக்-பேட்டர்ன் டயர்களுடன் கூடிய அலாய் வீல்களை கொண்டுள்ளன. பிரேக்கிங் பணிக்காக முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் ஒற்றை டிஸ்கும் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜின் & மற்ற அம்சங்கள்:
NX500 மாடலில் 47bhp and 43Nm ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 471சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, கவுரவமான அளவிலான கிட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷனுக்கான ஐந்து அங்குல டிஎஃப்டி உள்ளது. 196 கிலோ எடையில் உருவாகும் இந்த மோட்டார்சைக்கிள், சிவப்பு மற்றும் கருப்பு எனும் இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் கவாஸாகி வெர்சிஸ் 650 மற்றும் மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் ஆகியவற்றுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமையும். அதேநேரம், CB500X போலல்லாமல் Honda NX500 மாடலுக்கான போட்டித்தன்மையை சமாளிக்க ஏதுவாக, அதன் விலை ரூ.7-7.5 லட்சம் வரம்பில் நிர்ணயம் செய்யப்படும்ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவர் இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில், Honda NX500 மாடலின் விநியோகம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.