மேலும் அறிய

Harley-Davidson X440: ஹார்லி- டேவிட்சன் X440 வாங்க போறீங்களா? 3 நாட்கள் மட்டுமே மிச்சம், மிஸ் பண்ணா கூடுதல் விலை..!

ஹார்லி - டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள, புதிய பைக்கிற்கான முன்பதிவு ஆகஸ்ட் 3ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி - டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள, புதிய பைக்கிற்கான முன்பதிவு ஆகஸ்ட் 3ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹார்லி - டேவிட்சன் X440:

சொகுசு இருசக்கர வாகனங்களுக்கு பெயர்போன ஹார்லி - டேவிட்சன் நிறுவனம், முதன்முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல் இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளது. ஹார்லி - டேவிட்சன் X440 என பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், கடந்த 3ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

முன்பதிவு தீவிரம்:

வாகனம் அறிமுகமானது முதலே இதற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹார்லி - டேவிட்சன் X440 வாகனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கான சோதனை ஓட்டம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விநியோகம் எப்போது?

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ரூ.5000 செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த தேதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் ஹார்லி - டேவிட்சன் X440 வாகனங்களின் விநியோகம் தொடங்கும் என ஹீரோ மோட்டோகார்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீம்ரனா பகுதியில் உள்ள ஹீரோ கார்டன் தொழிற்சாலையில், புதிய ஹார்லி - டேவிட்சன் X440 வாகன உற்பத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

இன்ஜின் விவரம்:

தற்போது, ​​இந்தியாவில் ஹார்லி - டேவிட்சன் X440 விலையானது டெனிம் வேரியண்டின் விலை ரூ.2.29 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் டாப்-ஸ்பெக் எஸ் வேரியண்டின் விலை ரூ.2.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Harley-Davidson X440 ஆனது 440 cc சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு, 2-வால்வ் பெட்ரோல்  இன்ஜின் ஆகும், இது 26HP மற்றும் அதிகபட்சமாக 38Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஸ்லிப்பர் கிளட்ச்சையும் பெற்றுள்ளது.

விலை உயர வாய்ப்பு:

அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹார்லி - டேவிட்சன் X440-க்கான இரண்டாம் கட்ட முன்பதிவு எப்போது தொடங்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், இரண்டாம் கட்ட முன்பதிவு தொடங்கும்போது, ஹார்லி - டேவிட்சன் X440-ன் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Embed widget