Tata Curvv Vs Hyundai Creta: அட்ராசக்க..! ஹுண்டாய் கிரேட்டாவை ஓரம்கட்டும் டாடா கர்வ்வ் - அசத்தும் புதிய அம்சங்கள் என்ன?
Tata Curvv Vs Hyundai Creta: ஹுண்டாய் கிரேட்டா மாடலை தொழில்நுட்ப அம்சங்கள் அடிப்படையில், டாடா கர்வ்வ் பின்னுக்கு தள்ளுகிறது.
Tata Curvv Vs Hyundai Creta: ஹுண்டாய் கிரேட்டா மாடலைவிட டாடா கர்வ்வ் மாடல், எப்படி மேம்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹுண்டாய் கிரேட்டா Vs டாடா கர்வ்வ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்புதிய மிட்சைஸ் SUV ஆன, கர்வ்வ் இந்திய சந்தையில் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. கூபே எஸ்யூவி மின்சாரம், பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று பவர்டிரெய்ன்களில் விற்பனைக்கு உள்ளது. இது, இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கும் ஹூண்டாய் கிரேட்டாவை எதிர்கொள்வது குற்இப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக, டாடா மோட்டார்ஸ் வரும் 7ம் தேதி முதலில் Curvv மின்சார எடிஷனையும், பின்னர் ICE எடிஷனையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், தொழில்நுட்ப அம்சங்கள் அடிப்படையில், கிரேட்டாவை விட டாடா கர்வ்வ் எப்படி மேம்பட்டுள்ளது என்பது, ஒரு ஒப்பீடாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
கர்வ்வ் vs கிரேட்டா - ஃப்ளஷ் ஹேண்டில்பார்கள்:
Tata Curvv ஆனது அதன் செக்மென்ட்டில் ஸ்போர்ட் ஃப்ளஷ் ஹேண்டில்பார்களை வழங்கும் முதல் SUV ஆகும். மலிவு விலையில் பிரீமியம் அம்சங்களுடன் கிடைக்கும் என்பதால், நிறுவனம் தனது புதிய எஸ்யூவியை ஆக்ரோஷமாக நிலைநிறுத்துகிறது. மஹிந்திரா XUV700 க்குப் பிறகு இந்த அம்சத்துடன் பொருத்தப்பட்ட ரூ. 30 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் உள்ள இரண்டாவது வாகனமாக Curvv இருக்கும் .
கர்வ்வ் vs கிரேட்டா - இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:
ஹாரியர், சஃபாரி மற்றும் நெக்ஸான் EV க்குப் பிறகு, மிகப்பெரிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைப் பெறும் டாடா மோட்டார்ஸின் அடுத்த வாகனம் Curvv ஆகும். இதில் உள்ள ஹர்மானின் தொடுதிரை டிஸ்ப்ளே ஆனது மிட்சைஸ் SUV பிரிவில் மிகப்பெரியதாகும். JBL இலிருந்து 13 ஆடியோ மோட்களுடன், இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயையும் பெறுகிறது. கிரேட்டா மறுபுறம் 10.25 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்வ்வ் vs கிரேட்டா - கெஸ்ட் கன்ட்ரோல்ட் பவர்ட் டெயில்கேட்:
மிட்சைஸ் எஸ்யுவி பிரிவில் கெஸ்ட் கன்ட்ரோல்ட் பவர் டெயில்கேட் கொண்ட முதல் வாகனமாக கர்வ் சந்தைக்கு வரவுள்ளது. இந்த அம்சத்தை சஃபாரியில் இருந்து Curvv பெற்றுள்ள்அது. பின்பக்க பம்பரின் கீழ் காலை ஸ்வைப் செய்வதன் மூலம் பூட்டை திறக்க முடியும் என்பதால் இது வசதியை அதிகரிக்கிறது. ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் டெயில்கேட்டையும் எளிதாக மூடலாம்.
கர்வ்வ் vs கிரேட்டா - ட்ராஃபிக் சிக்னல் அங்கீகாரம்:
அனைத்து பெரிய கார் உற்பத்தியாளர்களும் புதிய கர்வ்வ் உட்பட, நடுத்தர SUV பிரிவில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை (ADAS) வழங்குகிறார்கள் அல்லது விரைவில் வழங்குவார்கள். டாடா மோட்டார்ஸ் கிரேட்டா போன்ற லெவல் 2 ADAS உடன் Curvv ஐ உருவாக்கியுள்து. ஆனால் புதிய Coupe SUV கூடுதலாக ட்ராஃபிக் சிக்னல் அங்கீகாரத்தைப் பெறும். முன்பக்க சென்சார்கள் உதவியுடன், நீங்கள் தவறவிட்ட ஸ்பீட் லிமிட் போன்ற சாலை அடையாளங்களைப் படித்து அது டாஷ்போர்டில் காண்பிக்கும்.
கர்வ்வ் vs கிரேட்டா- டிரைவர் கன்சோலில் நேவிகேஷன் டிஸ்ப்ளே:
Curvv மற்றும் கிரேட்டா ஆகிய இரண்டு மாடல்களும், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை பெறுகின்றன. அதில் டயரின் ஆரோக்கியம் , வாகனத் தகவல்கள் போன்றவற்றைப் படிக்கும் மல்டிஃபங்க்ஸ்னல் டிஸ்ப்ளேவை வழங்கும். அதேநேரம், Curvv இன்னும் ஒரு படி மேலே சென்று, ஓட்டுனருக்கு இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் நேவிகேஷன் டிஸ்ப்ளேவைச் சேர்த்துள்ளது. இந்த அம்சம் பொதுவாக சொகுசு வாகனங்களில் மட்டுமே காணப்படும்.