மேலும் அறிய

Flagship Motorcycle: இந்தியாவில் உள்ள ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிள் என்ன? - பல்வேறு நிறுவனங்களின் டாப் மாடல்?

Flagship Motorcycle: இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஒவ்வொரு நிறுவனத்தின் முதன்மையான அதாவது ஃபிளாக்‌ஷிப் மாடல் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Flagship Motorcycle: இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தின் முதன்மையான அதாவது ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இருசக்கர வாகன சந்தை:

இந்தியாவில் இருசக்கர வாகனம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் பல்வேறு மாடல் வாகங்களை உற்பத்தி செய்கின்றனர். அதேநேரம், ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களது அடையாளமாக, வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் பிளாக்‌ஷிப் எனப்படும் முதன்மையான இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் உள்ள முக்கிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின், முதன்மையான இருசக்கர வாகன விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டிவிஎஸ் Apache RR310:

இந்தியாவில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் தனது, முதன்மையான வாகனமாக Apache RR310 மாடலை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 312.2 cc திறன் கொண்ட இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 174 கிலோ எடையிலான இந்த வாகனம், லிட்டருக்கு 34.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440 :

இந்திய இருசக்கர வாகன சந்தையில் தொடர்ந்து கோலோச்சும், ஹீரோ நிறுவனத்தின் முதன்மையான இருசக்கர வாகனமாக ஹீரோ மேவ்ரிக் 440 மாடல் பைக் உள்ளது. அந்நிறுவன வாகனங்களிலேயெ மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜினை பெற்றுள்ள வாகனம் இதுதான். அதன்படி, மேவ்ரிக் மாடலானது 440சிசிசி  சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்ட் இன்ஜினை கொண்டுள்ளது. 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வாகனமானது,
27 ஹெச்பி பவரையும், 36 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த வாகனத்தின் விலையானது, 2.40 லட்சத்தில் தொடங்கி 2.68 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கோல்ட் விங்:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக, இந்திய சந்தையில் இருப்பது கோல்ட் விங். இதன் விலை 39 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1833 cc திறன் கொண்ட இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 126.4 PS மற்றும் 170 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். 

சுசுகி ஹயபுசா:

சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருப்பது ஹயபுசா. அந்நிறுவனத்தின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டுஇந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. 266 கிலோ எடைகொண்ட இந்த வாகனத்தில், 1340 CC இன்ஜின் இடம்பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயர்களை கொண்ட இந்த வாகனம் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை இந்திய சந்தையில் 13 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமாஹா YZF R1:

Yamaha நிறுவனத்திற்கு YZF R1 மாடல் அதன் ஃபிளாக்‌ஷிப் வாகனமாக உள்ளது. ஒரு வேரியண்ட் இரண்டு வண்ணங்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இதன் விலை 20 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள, 998 ccbs4 இன்ஜின் 200 PS மற்றும் 112.4 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 200 கிலோ எடைகொண்ட இந்த வாகனமானது, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் வழங்குகிறது.

பஜாஜ் டாமினர் 400:

மலிவு விலை மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதன் மூலம் புகழ்பெற்ற, பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக டாமினர் 400 உள்ளது. இதன் விலை 2.30 லட்சம் மட்டுமே. அந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக் மாடல் இதுதான். 373.3 cc திறன் கொண்டுள்ள இந்த இன்ஜின், 40 PS மற்றும் 35 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 193 கிலோ எடையுடன் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget