மேலும் அறிய

Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!

Car Safety Features: ஒவ்வொரு காரிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Car Safety Features: விபத்தின் போது பயணிகளின் உயிரை காக்க உதவ, ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

காரின் பாதுகாப்பு அம்சங்கள்:

கார் ஆடம்பம் என்ற பிரிவில் இருந்து மிகுந்த அத்தியாவசியமானதாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக புதியதாக கார் வாங்கும் அனைவருமே அதில் இடம்பெறும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மிகுந்த கவனம் கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே ஒவ்வொரு உற்பத்தியாளரும், தங்களது வாகனங்களில் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி அவற்றை கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றனர். இதனை அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. உயிர் காக்கும் அம்சம் என்பதால், கார்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாவிட்டாலும், சில அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ஏர்பேக்குகள்:

ஒரு கார் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும் தவிர்க்கக் கூடாத பாதுகாப்பு அம்சம் ஏர்பேக். ஏனெனில் விபத்து ஏற்படும் போது ஓட்டுனர் அல்லது பயணிகளின் மேல் உடல் அல்லது தலை, வாகனத்தின் உட்புறத்தில் மோதும் வாய்ப்பை ஏர் பேக்குகள் குறைக்கின்றன. ஒரு காரில் இரட்டை முன் ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்றாலும், குறைந்தது ஆறு ஏர்பேக்குகள் (பக்க மற்றும் திரைச்சீலை உட்பட) கொண்ட மாடலை வாங்க பயனாளர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர். ஏர்பேக்குகள் சீட் பெல்ட்களுடன் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளனவா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஆன்டி- லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உடன் கூடிய எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் விநியோகத்துடன் (EBD)

காரில் திடீரேன பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தும்போது போது ABS உடன் EBD உதவுகிறது. ஒருவர் திடீரென பெரும் சக்தியுடன் பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தினால், காரின் சக்கரங்கள் லாக் ஆகி கட்டுப்பாட்டை இழந்துவிடும். ஆனால் ABS உடன் கூடிய EBD தொழில்நுட்பமானது,  திடீரென பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தும்போது சக்கரங்கள் லாக் ஆவதையும் சறுக்குவதையும் தடுத்து கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது.

3. எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC)

இந்த அம்சம் ஒரு காரின் ஸ்டீயரிங் கோணத்தையும், அதன் தனிப்பட்ட சக்கர சுழற்சியையும் கண்காணிக்கிறது. அவசரநிலையின் போது, ESC பிரேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் கட்டுப்பாட்டை மீண்டும் பெற இன்ஜின் சக்தியை சமநிலைப்படுத்துகிறது. இது ஈரமான சாலைகளில் திரும்பும்போது அல்லது அதிகப்படியாக வாகனத்தை திருப்பும்போது அல்லது வளைவுகளில் வாகனத்தை திருப்பும்போது ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுக்க உதவுகிறது.

4. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

ஒரு காரின் நான்கு டயர்களிலும் தேவையான அளவிற்கு காற்று இருப்பது, வாகனத்தின் நிலைத்தன்மை மற்றும் சிறந்த கையாளுதலுக்கு முக்கியமானது. இருப்பினும், டயரின் அழுத்தம் குறைவாக இருந்தால் ஓட்டுநர் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாது. நான்கு டயர்களில் ஏதேனும் குறைந்த காற்றழுத்தம் இருந்தால் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு எச்சரிக்கையை அனுப்புவதால், TPMS அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

5. பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன்:

பிளைட் ஸ்பாட் என்பது பல்வேறு காரணங்களால் ஓட்டுநரால் பார்க்க முடியாத சாலைப் பகுதிகள் ஆகும். இந்த இடங்கள் சில நேரங்களில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம். எனவே அவை கண்காணிக்கப்பட வேண்டும். அந்த வகையில் பிளைண்ட் ஸ்பட் டிடெக்சன் அமைப்பு, வாகனம் மற்றும் அதில் பயணிப்போரின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும். ஓட்டுநருக்கு அத்தகைய தகவலை அனுப்ப சென்சார்களைப் பயன்படுத்துகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget