Citroen Basalt SUV: வெறித்தனமான லுக் - புதுசா தரமா சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி இன்று சர்வதேச சந்தையில் அறிமுகம்
Citroen Basalt SUV: சிட்ரோயன் நிறுவனத்தின் பசால்ட் எஸ்யுவி கார் மாடல், இன்று சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Citroen Basalt SUV: சிட்ரோயன் நிறுவனத்தின் பசால்ட் எஸ்யுவி கார் மாடல், இந்திய சந்தையில் டாடா கர்வ் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி:
சிட்ரோயனின் புதிய கூபே-எஸ்யூவி, இதுவரை C3X என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பெயர் பாசால்ட் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கார் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. Basalt coupe SUV Citroen's பிராண்டின் C3 Aircross SUVயை விட மேலே நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே நிலைநிறுத்தப்படும், இது அடிப்படையில் அந்நிறுவனத்தின் Basalt மாடலுக்கான நடைமுறை மற்றும் வழக்கமான தோற்றம் கொண்ட புதிய மாற்றாகும். இரண்டு Citroen SUVக்களும் நிறைய பொதுவான ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனாலும், பாசால்ட்டின் கூபே போன்ற வடிவமைப்பு மற்றும் உயர்-பயண நிலைப்பாடு ஆகியவை, அதனை Tata Curvv கூபே SUV-க்கு இந்திய சந்தையில் நேரடியாக போட்டியாக மாற்றுகிறது.
டீசர் சொல்வது என்ன?
பசால்ட் கார் மாடல் தொடர்பான சிட்ரோயன் நிறுவன டீசர், கூபே போன்ற ரூஃப்லைன் ஒரு குறுகிய பூட் லிட் உடன் நேர்த்தியாக ஒன்றிணையும் ஸ்டைலான ஸ்லாண்ட்-பேக் புரொஃபைலை காட்டுகிறது. இருப்பினும், சிட்ரோயன் பசால்ட், ஸ்கோடா சூப்பர்பில் இருப்பதைப் போன்ற லிஃப்ட்-பேக் டைப் டெயில்கேட்டுடன் வரும். ஸ்டைலான டெயில்-லேம்ப் வடிவமைப்பானது மிகவும் பிரீமியம் யூரோ-ஸ்பெக் C3 ஹேட்ச்பேக்கைப் போன்றே அமைந்துள்ளது.
சிஎம்பி மாடுலர் பிளாட்ஃபார்ம், சில பாடி பேனல்கள் மற்றும் பவர்டிரெய்ன் உள்ளிட்ட சில அம்சங்களை சி3 ஏர்கிராஸுடன் பசால்ட்டை சார்ந்து உள்ளது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, பசால்ட்டின் முன்பகுதி C3 ஏர்கிராஸைப் போலவே அமைந்துள்ளது. அதேநேரம், கூடுதல் குரோம் பிட்களும் இருக்கும். சி3 ஏர்கிராஸ், பெரிய அலாய் வீல்கள் மற்றும் கரடுமுரடாக தோற்றமளிக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் போன்றவற்றை தன்னகத்தே பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் நீக்கப்பட்ட காரணத்தால், C3 ஹேட்ச்பேக் மற்றும் Aircross ஆகிய மாடல்கள் விற்பனையில் பெரிதாக சோபிக்கவில்லை. அதற்கு சான்றாக தான பல டீலர்கள் கைவசம் இன்னும் விற்கப்படாத 2023 யூனிட்கள் உள்ளன. இதன் விளைவாகவே சிட்ரோயன் பசால்ட் கார் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது. அதன்படி, எலக்ட்ரிக்-ஃபோல்டிங் விங் மிரர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜின் விவரங்களும், அறிமுகமும்:
Citroen Basalt இந்திய சந்தையில் 110hp, 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் வரும் என தெரிகிறது. இது C3 ஏர்கிராஸ் மற்றும் C3 ஹேட்ச்பேக் மாடலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிட்ரோயன் நிறுவனம் பசால்ட் அடிப்படையில் ஒரு மின்சார வாகனத்தை விரைவில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சிட்ரோயன் பசால்ட்டின் உட்புற, ப்வெளிப்புற மற்றும் விலை தொடர்பான விவரங்களை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. அதைதொடர்ந்து, பசால்ட் கார் மாடல் இந்திய சந்தைக்கு எப்போது வரும் என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகக் கூடும்.